இன்றைய ராசி பலன் – 21-5-2020

rasi palan - 21-5-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை நிறைவேறும் நாள். நண்பர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்க மாட்டீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். உறவினர்களின் ஏற்பட்ட பிரச்சினையின் காரணமான உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பயணத்தால் அலைச்சல் ஏற்படும். உட்கொள்ளும் உணவால் சிறிது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள். மகளுக்கு திருமணம் தடை நீங்கி நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் வேலையாட்களால் லாபம் அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து போவதால் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்க கூடும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் செயல்கள் அனைத்திலும் துணிச்சலுடன் செயல்படும் நாள். சொத்து வாங்குவது விற்பது போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சியில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் வந்து நீங்கும். கர்ப்பிணிப் பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புது முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். உறவினர்களின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். புதிய வாகனம் வாங்குவீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பதால் மேலதிகாரியிடம் பாராட்டு பெறுவீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உத்தியோகத்தில் ஊழியர்களிடம் அனுசரித்து செல்ல வேண்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கக்கூடும். அரசாங்க உத்தியோகம் கைகூடும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சால் சிறியது மனக்கசப்பு ஏற்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படுவதால் அனுசரித்துப் போவது நல்லது. வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்து போடுவதில் அலட்சியம் வேண்டாம். உத்யோகத்தில் ஊழியர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். மற்றவர்களிடம் சாமர்த்தியமாகவும் சாதுர்யமாகவும் பேசி காரியம் சாதிப்பீர்கள். வீண் செலவுகள் அதிகரிப்பதால் சேமிக்கவேண்டும் என்ற எண்ணம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புதிய தொழில் முயற்சிகள் தோல்வியில் முடியும். உத்தியோகத்தில் மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடியும் நாள். நண்பர்களிடம் பழைய நிகழ்வுகளை பேசி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களுக்கு செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வியில் கவனம் தேவை. பகைவர்களிடம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. மனத் துணிச்சலுடன் செயல்படுவீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க எளிதில் வலியை கண்டறிவீர்கள். சகோதரர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். இன்று உங்களுக்கு நல்ல செய்தி வர வாய்ப்புகள் உள்ளது. திருமணப் தடை நீங்கி நல்ல வரன் கைகூடும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் முன்னுரிமை பெறுவீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செய்யும் செயல்கள் அனைத்திலும் பொறுமையுடன் செயல்பட வேண்டிய நாள். தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் முடித்துக் காட்டுவீர்கள். அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். முன்கோபத்தால் உறவினர்களின் உறவை இழப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் பண உதவி கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் ஊழியர்களின் மூலம் லாபம் அதிகரிக்கும். அரசாங்க உத்தியோகம் கைகூடி வரும். நீங்கள் வீடு வாங்குவது விற்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டால் அது வெற்றியில் முடியும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி பெறும் நாள். எதிர்பார்த்த இடத்தில் தேவையான பணம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். நண்பர்கள் உங்களின் உதவியை நாடுவார்கள். உறவினர்கள் மூலம் நல்ல செய்தி வர வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் வெற்றி காண்பீர்கள். பெற்றோர்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றவர்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.