இன்றைய ராசி பலன் – 21-6-2020

rasi palan - 21-6-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை நன்றாக முடியும் நாள். எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பொறுமை தேவை. பெற்றோரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாள் ஆகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் முக்கிய முடிவுகளை துணிச்சலாக எடுப்பீர்கள். திருமணம் போன்ற சுப காரியங்கள் கைகூடும். கொடுத்த கடன் திருப்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் புது முயற்சியால் பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சனைகள் வந்தாலும் ஒற்றுமையாக இருப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் பண உதவி கிடைக்கும். பல நாட்கள் காத்திருந்த அரசாங்க உத்தியோகம் கைகூடி வரும். உடன் பிறந்தவர்கள் மூலம் செலவு அதிகரித்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்வீர்கள். மற்றவர்களிடம் பேசும் பொழுது கவனம் தேவை. புதிய முயற்சிகளில் ஈடுபட்டால் அது தோல்வியில் முடியும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே நடைபெறும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வழக்கமான செயலில் மட்டுமே ஈடுபட வேண்டும். செலவுகளை சமாளிக்க கடன் வாங்கவேண்டிய நிலைமை ஏற்படக்கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தந்தையிடம் வீண் பிரச்சனை ஏற்படக்கூடும். மற்றவர்களிடம் பேசும் போது நிதானமாக பேச வேண்டும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போல நடைபெறும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுக்கு எதிர்பார்த்த பணம் கிடைத்தாலும் வீண் செலவுகள் அதிகரிக்கும். பெற்றோரிடம் ஏற்பட்டிருந்த மனஸ்தாபம் நீங்கும். கொடுத்த கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் முக்கிய முடிவு எடுப்பதை தவிர்க்க வேண்டும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். உத்யோகத்தில் கூடுதலாக பணியாற்றுவீர்கள். வியாபாரம் மந்தமாக காணப்படும். திருமணத்திற்காக நகை வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தின் மற்றவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதில் அதிகப்படியாக செலவும் அலைச்சலும் ஏற்படக்கூடும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உள்ளது.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதில் பிரச்சனை ஏற்படக்கூடும். குழந்தைகளின் படிப்பில் கவனம் தேவை. குடும்பத்திற்காக செலவு செய்யவேண்டி வரும். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவினர்களால் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சினைகள் நீங்கும். வியாபாரத்தில் பணியாளர்கள் மூலம் செலவுகள் ஏற்பட்டாலும் லாபம் அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த காரியத்தை முடிப்பதில் தாமதம் ஏற்பட்டாலும் அதை நன்றாக முடித்து விடுவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் செலவுகள் அதிகரித்தாலும் அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் காட்டுவது நல்லது. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனைத்து விஷயத்திலும் பொறுமையாக கடைப்பிடிக்கவும். கணவன் மனைவி இருவரும் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்துடன் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபடுவார்கள். தொழில் பங்குதாரர்களால் பணம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்தில் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். பிள்ளைகளிடம் மனஸ்தாபம் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் பணம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொடுத்த பழைய கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திருமணம் தடை நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும். உத்தியோகத்தில் இன்று உங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கக்கூடிய புதிய முயற்சிகள் அனைத்தும் சாதகமாக முடியும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எதிர்பார்த்த இடத்தில் பணம் வந்து சேரும். பிள்ளைகளின் பிடிவாதத்தால் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். சகோதரர்களிடம் ஒற்றுமை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு வருமானம் உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைகள் வெளிப்படும் நாளாக இன்று உங்களுக்கு அமைகிறது. சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் வந்து சேரும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளால் ஏற்பட்ட சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும். அரசாங்க உத்தியோகம் கைகூடி வரும். நினைத்த காரியத்தை வெற்றிகரமாக முடித்து விடுவீர்கள். வியாபாரத்தில் பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -