இன்றைய ராசி பலன் -22-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும். தாய்மாமன் மூலம் எதிர் பார்த்த பணம் வந்து சேரும். புதிய முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே அமையும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

ரிஷபம்:
rishabam
மகிழ்ச்சியான நாள். குடும்பத்தாருடன் தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் செல்விர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மிதுனம்:
Midhunam
கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். தாய்வழி உறவுகளால் நல்ல செய்தி வந்து சேரும். மனைவியின் விருப்பத்தை பூர்த்தி செய்வீர்கள். மாலையில் நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். அலுவலத்தில் பணியாளர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த படி லாபம் கூடுதலாக அமையும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் வீண்செலவுகள் உண்டாகும்.

கடகம் :
அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். தந்தைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் வீண்செலவுகள் ஏற்படும். மாலையில் புதிய முயற்சியில் ஈடுபடுங்கள். நண்பர்களால் புதியவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களால் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்:
simam
அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுமுகமாக முடியும். எதிர்பார்த்த பணம் வரக்கூடும். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். பிள்ளைகளால் இன்று மேலோங்கி காணப்படுவீர்கள். அலுவலகத்தில் பணியாளர்களால் பிரச்சனைகள் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களின் போது கவனமாக இருங்கள்.

கன்னி:

மகிழ்ச்சியான நாள். பெற்றோர்களின் தேவையை அறிந்து நிறைவேற்றும் நாள். மனைவியுடன் கஷ்டங்களை பகிர்ந்து கொண்டால் சற்று ஆறுதலாக இருக்கும். எதிர் பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

துலாம்:

புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். குடும்பத்தில் அனைவரையும் அனுசரித்து செல்லுங்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியில் உண்பதை தவிர்த்து கொள்ளுங்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

விருச்சிகம்:

வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தாரின் தேவைகளால் வீண்செலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். தாய்வழி உறவுகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு:

அலுவலக பணிகளை உற்சாகமா செய்வீர்கள். அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்றுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

மகரம்:
magaram

அரசாங்கம் அதிகாரிகளால் எதிர்பார்த்த பணிகள் தாமதமாக முடியும். தாய்வழி உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். சிலர் திடீர் பயணங்களை மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

கும்பம்:

தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் கிட்டும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். புதிய முயற்சியில் ஈடுபடாதீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கூடுதலாக அமையும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமான நாள்.

மீனம்:

மகிழ்ச்சியான நாள். புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். சகோதரர்களால் செலவுகள் உண்டாகும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த பணிகள் முடிய தாமதமாகும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சனைகள் உண்டாகும். மாலையில் பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -