Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/05/2019)

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
Mesham Rasi

இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். எதிர்பாராத பொருள் வரவுக்கும் இடம் உண்டு. வெளியூர்களிலிருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்குத் தாய்வழி உறவுகளால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

ரிஷபம்:
Rishabam Rasi

மிகவும் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பாராத மகிழ்ச்சியான அனுபவங்கள் ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகவே இருக்கும். வெளியில் செல்லும்போது கவனமாக இருக்கவும். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். ரோகிணி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
midhunam

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்புண்டு. உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு பாராட்டு கிடைக்கும். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

கடக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி காரியங்களில் அனுகூலம் உண்டாகும். தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.

- Advertisement -

சிம்மம்:
simmam

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வீண் அலைச்சலைத் தவிர்க்கவும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

கன்னி:
Kanni Rasi

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக அமையும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வெளியூர்களிலிருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi

புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய காரியங்களை காலையிலேயே தொடங்கிவிடுவது நல்லது. சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும், குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பும் சிலருக்கு அமையும். சுவாதி முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் ஆதாயமும் உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam

உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். பிரபலங்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைப்பது மகிழ்ச்சி தரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi

இன்று மனோ தைரியம் கூடும். சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் பணவரவு திருப்தியளிக்கும். உறவினர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

மனம் உற்சாகமாகக் காணப்படும். புதிய முயற்சிகள் அனுகூலமாக முடியும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். குடும்பம் தொடர்பான விஷயங்களை ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் பணலாபம் கிடைக்கும்.

மீனம்:
meenam

இன்று விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வரும். குடும்ப நலனில் அக்கறை கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி நிலையை கண்டு பிறர் வியப்படைவர். தாராள பணவரவு கிடைக்கும். இயன்ற அளவு தானதர்மம் செய்வீர்கள். விருந்து விழாவில் கலந்து கொள்வீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -