இன்றைய ராசி பலன் – 22-07-2020

rasi palan - 22-7-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். வெகு நாட்களாக நிலவி வந்த கடன் தொல்லைகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த மனக்கசப்புகள் விலகும். விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு மிகச் சிறப்பான நாளாக அமையும். எந்த செயலையும் தைரியமாக செய்து முடிப்பீர்கள். பிள்ளைகள் வழியில் அனுசரித்து செல்வது நல்லது. உடன்பிறந்தவர்கள் வழியில் ஆதாயம் காண்பீர்கள். வாய்வு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. பிடாரி அம்மன் வழிபாடு நிலையான வரவுக்கு வழிவகுக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகள் கைகூடிவரும்.தொட்டதெல்லாம் வெற்றியில் முடியும். நண்பர்களிடம் பணம் விஷயத்தில் கவனம் தேவை.விநாயகருக்கு எருக்கம் மாலை சாற்றி வர தொழிலில் லாபம் காண்பீர்கள்.

கடகம்

- Advertisement -

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புத்துணர்ச்சி மிக்க நாளாக அமையும். பூர்வீக சொத்துப் பிரச்சனைகள் நீங்கி பணவரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. புது முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. சிவன் வழிபாடு நல்ல பலனை கொடுக்கும்.

சிம்மம்

- Advertisement -

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பம் மிகுந்த நாளாக அமையும். குடும்பத்தினருடன் ஆலோசிப்பது நல்லது. வாகன ஓட்டிகள் கவனமுடன் இருக்க வேண்டும். சுயதொழில் செய்வோர் புதிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.குருபகவானை வழிபட்டு வர செல்வ அனுகூலம் காண்பீர்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு கிடைக்கும் நாளாக அமையும். மனைவி மற்றும் பிள்ளைகள் உடல்நலத்தில் அக்கறை தேவை.சுயதொழில் செய்வோருக்கு விரயம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் வந்து சேரும். துர்கை அம்மனை வழிபட்டுவர மன சஞ்சலங்கள் அகலும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவைகள் பூர்த்தியாகும் நாளாக அமையும். இழுபறியில் இருந்த பணப் பிரச்சனைகள் தீரும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். ஜீரணம் சம்பந்தமான வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். தொழிலில் திருப்திகரமான சூழல் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். புதிய முயற்சிகளை மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. ஆதிபராசக்தியை வணங்கிவர சுபிட்சம் உண்டாகும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக இருக்கும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய பொருட்கள் வாங்க சூழல் உருவாகும். வியாபாரத்தில் லாபகரமான சூழல் ஏற்பட வாய்ப்புண்டு. கருட பகவானை வணங்கி வர நிலையான பொருளாதார சூழல் உருவாகும்.

மகரம்

மகர ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சல் மிகுந்த நாளாக இருக்கும்.குடும்பத்தினருடன் அனுசரித்துச் செல்வது சிறப்பு. காரியத் தடைகள் நீங்கும். பணம் வரவு செலவுகளில் கவனம் தேவை. புது நட்புக்கள் உருவாகும். கழுத்து மற்றும் தலை பிரச்சினைகள் உருவாக வாய்ப்புண்டு.சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு என்ற நாள் தேவைகளை பூர்த்தி செய்யும் நாளாக அமையும். எழுது நம்முடைய காரியங்களில் தடைப்பட்டுப் போகும் சூழல் உண்டாகும். தன்னம்பிக்கையோடு தடைப்பட்ட காரியங்களை முடித்துக் காட்டுவீர்கள். உடன் பணிபுரிவோர் ரோடு அனுசரித்துப் போவது நல்லது. முருகப்பெருமானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர தடைகள் நீங்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யக்கூடிய நல்ல நாளாக அமையட்டும். மனைவி வழியே ஆதாயம் காண்பீர்கள். சக ஊழியர்களிடம் நிலவை வந்த கருத்து வேறுபாடுகள் விலகும். கடன் சுமைகள் விலகி வீட்டில் மகிழ்ச்சி பெருகும். முருகப் பெருமானை வணங்கி வர மன அமைதி கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -