Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (22/08/2019): இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும்

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். விருந்து விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். பிற்பகலுக்கு மேல் சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். வங்கிக் கடனுக்கு விண்ணப்பித்து இருந்தவர்களுக்குச் சாதகமான பதில் வரும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எதிலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

மிதுனம்:
midhunam

மிதுன ராசிக்கு இன்றைய ராசி பலன் படி சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணை வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். செலவுகள் அதிகரிக்கக் கூடும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். விட்டுப்பிடிப்பது நல்லது. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi

மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும்.

சிம்மம்:
simmam

சிலருக்குப் புண்ணியத் தலங்களுக்குச் செல்லும் வாய்ப்பு உண்டாகும். திடீர் செலவுகள் ஏற்படுவதன் காரணமாக சிறிய அளவில் கடன் வாங்க நேரிடும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும்.

கன்னி:
Kanni Rasi

வாழ்க்கைத்துணை வழியில் நடைபெறும் சுப நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். பணியின் காரணமாக சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். வீண் அலைச்சல் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மாலையில் இறைவழிபாடு செய்யும் வாய்ப்பு ஏற்படும்.

துலாம்:
Thulam Rasi

இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். புதிய முயற்சி எதுவும் இன்றைக்கு வேண்டாம். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கக்கூடும்.

விருச்சிகம்:
virichigam

மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

தனுசு:
Dhanusu Rasi

காலைப் பொழுது இதமாக விடியும். உறவினர் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூர்களில் இருந்து சுபச் செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெரியோர்களின் அன்பும் ஆசிகளும் கிடைக்கும்.

மகரம்:
Magaram rasi

அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசு காரியங்கள் அனுகூலமாக முடியும்.

மீனம்:
meenam

பிற்பகலுக்கு மேல் ஏற்படும் திடீர் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்தி வரும். மாலையில் வாழ்க்கைத்துணை வழி உறவினர்களின் வருகையும், அதனால் ஆதாயமும் கிடைக்கும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெண்களால் நன்மைகள் ஏற்படக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்