இன்றைய ராசி பலன் – 20-09-2019

Rasi Palan
- Advertisement -

அனைத்து ராசிகளுக்கான இன்றைய ராசி பலன் முழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்

மேஷம்:
Mesham

உற்சாகமான நாள். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். முயற்சிகளில் வெற்றி உண்டாகும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். உறவினர்களின் சந்திப்பு மனதுக்கு மகிழ்ச்சி தரும்.

- Advertisement -

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாகும்.

ரிஷபம்:
Rishabam

புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். சிலருக்கு பணியின் காரணமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். கணவன் – மனைவிக்குள் மனம் விட்டுப் பேசி பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். ஒரு சிலருக்கு வெளிநாட்டிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

ரோகிணி நட்சத்திரத்தில் புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.

மிதுனம்:
Midhunam

இன்று நீங்கள் தொடங்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். அலுவலகத்தில் பணிச்சுமை இருந்தாலும், உற்சாகமாகச் செயல்படுவீர்கள். தேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். பள்ளிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

- Advertisement -

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய் வழியில் நன்மைகள் ஏற்படும்.

கடகம்:
kadagam

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். உறவினர்கள் வருகை வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

சிம்மம்:
Simmam

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடைகள் ஏற்பட்டாலும், முடிவில் வெற்றி அடையும். அலுவலகத்தில் வேலைகள் அடுக்கடுக்காக வந்தாலும் அழகாகச் சமாளிப்பீர்கள். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

கன்னி:
Kanni

மனதில் இனம் தெரியாத உற்சாகம் காணப்படும். சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உள்ளது. கோயில் விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பும் சிலருக்கு ஏற்படும்.

அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த நல்ல செய்திகள் வரும்.

துலாம்:
Thulam

அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவையான உதவிகள் கிடைக்கும். அலுவலகப் பணிகளில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும்.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

விருச்சிகம்:
Viruchigam

நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். உறவினர்களின் வருகையால் உற்சாகம் ஏற்படும். நினைத்த காரியங்கள் சாதகமாக முடியும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. கல்லூரிக் கால நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை ஆதாயம் தரும்.

தனுசு:
Dhanusu

நீண்டநாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உள்ளது. அரசாங்க அதிகாரிகளால் ஆதாயம் உண்டாகும். தந்தை வழி உறவுகளால் நன்மை ஏற்படும். வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

மகரம்:
Magaram

இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை மற்றவர்களால் பாராட்டப்படும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும்.

சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும்.

கும்பம்:
Kumbam

இன்று புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். அலுவலகத்தில் மட்டும் வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த செய்திகள் வந்து சேரும். மாலையில் விருந்தினர் வருகை உண்டு.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசால் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:
Meenam

அரசு அதிகாரிகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். சிலருக்கு குலதெய்வ பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும்.

- Advertisement -