இன்றைய ராசி பலன் – 22-11-2020

rasi palan - 22-11-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர் கொள்ளும் தைரியமும், துணிச்சலும் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நிகழ்வுகள் நடை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றகரமான நாளாக அமைய இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் கிடைக்கப்பெறும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தங்களுடைய வேலையில் மட்டும் கவனமாக இருப்பது உத்தமம். தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். சுய தொழில் புரிபவர்களுக்கு எதிர்பாராத இடையூறுகள் பிரச்சனையாக உண்டு பண்ணலாம். பண ரீதியான விஷயத்தில் ஜாக்கிரதை தேவை.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவேண்டிய நாளாக அமைகிறது. தேவையற்ற உடல் உபாதைகள் தொந்தரவை கொடுக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமாக இருப்பது அவசியமாகும். பிள்ளைகள் வழியில் சில நல்ல விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அமைதியான சூழ்நிலை காணப்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பெண்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் ஆரோக்கியமான போட்டியாக மாறக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. நினைத்த காரியங்கள் நினைத்தபடி நடக்க இருப்பதால் மனம் மனமகிழ்ச்சி அடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவை கிடைக்க வேண்டிய நேரத்தில் கட்டாயம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பணத்தேவை எளிதாக பூர்த்தியாகிவிடும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நிதானமாக செயல்பட வேண்டியது அவசியமாக இருக்கும். நிதானம் தவறினால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களை உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ் நிலைக்கு தள்ளி விடுவார்கள். இதுவும் கடந்து போகும் என்கிற மனநிலைக்கு உத்தியோகத்தில் இருப்பவர்கள் இருப்பார்கள்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் பொருளாதார பிரச்சினைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள். இதுவரை இருந்து வந்த கடன் தொகைகள் குறைவதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்தபடி இருக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நிறைவேறாத ஆசைகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. பல நாள் காத்திருந்த கனவுகள் நனவாக சந்தர்ப்பங்கள் உருவாகும். உங்களை சுற்றி இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையேயான அன்யோன்யம் அதிகரிக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு லாபம் கிடைக்கும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனம் செலுத்தாமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் நல்லது நடக்கும். பிள்ளைகள் மூலம் அனுகூலமான செய்திகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அரசு வழி காரியங்கள் சாதக பலன்களை கொடுக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய முயற்சிகள் வெற்றி தரும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய விஷயங்களில் எதிர்பாராத வகையில் திருப்பங்களும் வெற்றிகள் குவியும். பெண்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டு. வாகன ரீதியான பயணத்தில் சற்று கவனம் தேவை. சுய தொழில் புரிபவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படாது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீண்டநாள் இழுபறியில் இருந்த கடன் தொகைகள் வசூலாகும். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். வேலையில்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை கிடைக்க வாய்ப்புகள் உண்டு.

மீனம்
எவரையும் எளிதாக எடைபோடும் மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கப்பெறும். பொருளாதாரத்தில் ஏற்றத்துடன் காணப்படுவதால் வீட்டுத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்வீர்கள். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்க அற்புதமான அமைப்பாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கை தேவை.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -