இன்றைய ராசி பலன் – 22-12-2020

rasi palan - 22-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் சிறிது தடை தாமதத்திற்கு பின் வெற்றியாக கூடிய வாய்ப்புகள் உண்டு. சுய தொழில் புரிபவர்களுக்கு ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் வரும் வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வது நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகள் வருவதற்கு சாத்தியக்கூறுகள் உண்டு எனவே எச்சரிக்கை தேவை.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானம் மற்றும் பொறுமை தேவை. குடும்பத்தில் இருக்கும் நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கும் வீண் வம்பு வழக்குகள் ஏற்படாமலிருக்க பேச்சைக் குறைத்துக் கொள்வது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணிய எண்ணம் எல்லாம் ஈடேற கூடிய அற்புதமான வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய புதிய முயற்சிகளில் அமோக வெற்றி கிடைக்கும். சிறு தொழில் புரிபவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் நிச்சயமாக இருக்கும். விநாயகரை வழிபடுவது மிகவும் நல்லது.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் பல வழிகளில் வந்து உங்களுடைய பொருளாதார ரீதியான பிரச்சனைகளை தீர்த்து வைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியாளர்கள் மூலம் ஆதரவு கிடைக்கும். சுய தொழிலில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் ஏமாற்றத்தை சந்திக்கக் கூடிய வாய்ப்புகளும் உண்டு. சுயதொழிலில் பணிபுரிபவர்களுக்கு நண்பர்கள் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிப்பதால் சிறிது டென்ஷன் இருக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும் அமைப்பாக இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகளும் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை எரிச்சலூட்டும் வகையில் இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்களுக்கு இனிய நாளாக அமையும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கு இடையே சிறு சிறு சண்டைகளும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் வந்துசேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த பணவரவு திருப்திகரமாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி தெளிவு பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் இட மாற்றம் குறித்த விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு. உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் சற்று வீண் விரயங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் வகையில் அமைப்பு இருப்பதால் மகிழ்ச்சியான நாளாக அமையும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு மனதிற்கு பிடித்தவரை அமைய வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய கை ஓங்கி இருக்கும். சுய தொழில் புரிபவர்களுக்கு சக பணியாளர்கள் இடையேயான கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த அன்னோன்யம் அதிகரிக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மனோதிடமும், வலிமையும் அதிகரிக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து இணைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் சிறப்பாக அமையும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதாரணமாக இருப்பதை விட கூடுதல் தைரியத்துடன் காணப்படுவீர்கள். திடீர் பணவரவு மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சுப காரியச் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் மூலம் நல்ல பலன் கிடைக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்