இன்றைய ராசி பலன் – 22-3-2020

rasi palan - 22-3-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையான செலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. தொழில் ரீதியாக லாபம் அதிகரிக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் உங்களுக்கு சாதகமாக செயல்படுவார்கள். மறைமுக பகை நீங்கும். எண்ணியது நிறைவேறும். குடும்பத்தில் உள்ள அனைவரும் உங்களை புரிந்து கொண்டு நடந்து கொள்வார்கள். அனல் தெறிக்கும் வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த விஷயத்திலும் நிதானமாக செயல்படுவது நல்லது. நெருங்கியவர்கள் மூலமாக வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சகோதர சகோதரி வழியில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். இல்லத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. குடும்பத்தில் தேவையற்ற வார்த்தைகளை தவிர்ப்பதால் சந்தோஷம் நிலைத்து நிற்கும். ஆரோக்கியத்தில் எச்கரிக்கை தேவை. அஜீரண கோளாறு ஏற்படலாம்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் எந்த ஒரு செயலிலும் மனக்குழப்பத்துடன் செயல்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. வீண் வாக்குவாதங்களால் மன நிம்மதி கெட்டு விடும். அதே போல் வெளி இடங்களில் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. குடும்பத்தில் உள்ள சிலர் தங்களை பற்றிய தவறான எண்ணங்களை நீக்கி சரியாக புரிந்து கொள்வார்கள். தேவையான ஓய்வு எடுத்து கொள்வது நல்லது.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் தேவையற்ற செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடங்கும் முயற்சிகளில் இருந்த இடையூறுகள் விலகி நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும். வேலையில் மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியை தரும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கி காணப்படும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்துடன் ஒன்றாக இருப்பதற்கான மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும். பொருளாதார பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். வேலையில் சக ஊழியர்களால் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவாகும். கடின உழைப்பின் மூலம் வியாபாரத்தில் லாபம் அடையலாம். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். குடும்பத்தில் உள்ள மூத்தவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வேலையில் எதிர்பாராத பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும். செலவுகளை சமாளிக்க கடன்கள் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். நண்பர்களின் உதவியால் சிக்கல்கள் ஓரளவு குறையும். எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினர் ஆதரவு கிட்டும். எதிலும் பொறுமை காப்பது நல்லது. எந்த கஷ்டத்தையும் குடும்பத்திற்காக பொறுமையுடன் சகித்து செயலாற்றுவீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் கல்விக்கான புதிய முயற்சிகள் வெற்றி தரும். தொழில் ரீதியாக பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளால் அனுகூலம் கிட்டும். சிலருக்கு புதிய வண்டி வாகனம் வாங்கும் யோகம் அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருப்பது நல்லது.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். செய்யும் செயல்களில் காலதாமதம் உண்டாகும். உடன் பிறந்தவர்களுடன் ஒற்றுமை குறையும். வியாபாரம் தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்களில் அலைச்சலுக்கு பிறகே லாபம் கிடைக்கும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படலாம். விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெளியூரிலிருந்து வரவேண்டிய தொகை வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற சூடான விவாதங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். சிலருக்கு எதிர்பார்த்த வங்கி கடன் கிடைப்பதில் சில இடையூறுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் ஆதரவால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். சகோதர, சகோதரிகளின் வழியே நல்ல செய்திகள் கிடைக்கும். எதிர்பாராத விஷயங்கள் நடைபெற வாய்ப்புகள் உண்டு.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாளில் எந்த செயலையும் மனமகிழ்ச்சியுடன் செய்வீர்கள். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடுவதற்கான வாய்ப்புகள் உருவாகும். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உடல் ஆரோக்கியம் சீராகும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். இல்லத்தில் நிம்மதி இருக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் இனிய நாளாக அமையும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.