இன்றைய ராசி பலன் – 22-05-2021

rasi palan - 22-5-21

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உற்றார் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களுடன் இணக்கம் ஏற்படும். பெண்கள் சுயமாக சிந்திக்க கூடிய திறன் அதிகரிக்கும். சங்கடங்கள் தீர சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் சாதுரியமாக கையாளக் கூடிய நீங்கள் வெற்றி காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்க்கும் அளவிற்கு முன்னேற்றம் இருக்காது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. பெண்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்க ஆஞ்சநேயரை வழிபடுங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பண பிரச்சனைக்கு உதவிகள் கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமையில் சிக்கல்கள் நீடிக்கும். எதிலும் நிதானத்துடன் கையாள்வது நல்லது. துர்க்கை வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் பிரச்சனைகள் படிப்படியாக குறையும். சக பணியாளர்களின் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. துன்பங்கள் தொலைய சரபேஸ்வரர் வழிபாடு செய்யுங்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி காண கூடிய யோகம் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அதனை எளிதாக சமாளிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல்-வாங்கலில் எச்சரிக்கை தேவை. உடன் இருப்பவர்களே உங்களை புரிந்து கொள்ளாமல் நோகடிக்க செய்வார்கள். பெண்களுக்கு மனம் போல் வாழ்க்கை அமைய கூடிய யோகம் உண்டு. விஷ்ணு வழிபாடு நலம் தரும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படலாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. உடல் ஆரோக்யம் சீராக இருக்க உணவு கட்டுப்பாடு அவசியம் என்பதை உணர்வீர்கள். ஸ்ரீராம வழிபாடு ஜெயம் தரும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் எதிர்பார்த்தபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தக தொடர்பு சிறப்பாக இருக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் உருவாகும். உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைப்பதில் காலதாமதம் ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். எதிலும் நன்மைகள் காண விநாயகப் பெருமானை வழிபடுங்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் நயமாக சாதித்து தேவைப்படுவதை பூர்த்தி செய்து கொள்வீர்கள். அரசு வழி காரியங்கள் அனுகூல பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தும் முன் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சகோதர சகோதரிகளின் ஆதரவு கிடைக்கும். பயணங்களின் பொழுது கவனமாக இருப்பது நல்லது. கவலைகள் நீங்க கந்தனை வழிபடுங்கள்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு மற்றவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். தொழில் மற்றும் வியாபார ஸ்தலங்களில் இருந்து வந்த மந்தநிலை மாறும். எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில் முன்னேற்றம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் அலட்சியம் காட்டுவதைத் தவிர்க்கவும். வீண்பழி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். அம்பாள் வழிபாடு நன்மை தரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறும். எதிர்பார்த்த சில விஷயங்கள் நல்ல பலனைக் கொடுக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த குழப்ப நிலை மாறும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். நண்பர்களின் ஆதரவும் தக்க சமயத்தில் கிடைக்கும். ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் படிப்படியாக குறையத் துவங்கும். நன்மைகள் காண நந்தி பகவானை வழிபடுங்கள்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகளை அசை போட கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. சில விஷயங்கள் காலம் கடந்து நடப்பதில் பிரயோஜனம் இல்லை என்பதை உணர்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் ஏற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். முருக வழிபாடு நன்மை செய்யும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படுவீர்கள். தொலை தூர இடங்களிலிருந்து இனிப்பான செய்திகள் வந்து சேரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் சில மனக்கசப்புகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் பாராட்டுகளைப் பெற்று கொடுக்கும். முக்கிய விஷயங்களில் கவனச்சிதறல் ஏற்படும் என்பதால் எச்சரிக்கை தேவை. கவலைகள் தீர குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.