இன்றைய ராசி பலன் – 22-6-2020

rasi palan - 22-6-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய லட்சியங்கள் கொள்கைகள் நிறைவேறும் நாள். அரசியல்வாதிகளால் செல்வாக்கும் அனுகூலமும் உண்டாகும்.
குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதனை சரிசெய்யும் திறன் கொண்டவர்கள். வீண் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மன அமைதியாக இருப்பது நல்லது எந்தவித முயற்சிகள் செய்தாலும் அதனை ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்வது மிகவும் நல்லது. மற்றவர்களிடம் கோபம் கொள்வது தவிர்க்க வேண்டும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் தேவை.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு இன்று நல்ல நாளாக அமைய போகிறது. அரசு வேலை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. நீண்ட நாளாக இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும் பணவரவு அதிகரிக்கும். நீண்ட நாளாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நன்முறையில் நடக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் உள்ளது. நண்பர்கள் உங்களுக்கு உதவியாகவும் அனுசரணையாக இருப்பார்கள். வாழ்க்கைத் துணையால் அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். நீங்கள் எந்தவித செயல் தொடங்கினாலும் அதில் வெற்றி காண்பீர்கள். உங்களுக்கு போதுமான அடிப்படை வசதி வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொள்வீர்கள். ஒரு புதிய தொழில் தொடங்குவீர்கள். எந்த செயல் செய்தாலும் அதனை யோசித்து செய்வதில் திறன் கொண்டவர்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வியாபாரத்தில் முன்னேற்றம் கூடும் நாளாக இது அமையும். தொழிலில் லாபம் அதிகரிக்க கூடும். எந்தவித ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதை தவிர்ப்பது நல்லது. சொன்ன சொல்லைக் காப்பாற்றும் எண்ணம் கொண்டவர். உங்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். சகோதரர்களால் சிறு மனக்கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் உண்டாகும். வெளிநாடுகளிலிருந்து நற்செய்தி வர வாய்ப்புகள் உள்ளது.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக அமைய போகிறது. நேற்றைய பணி ஒன்றை இன்று துரிதமாக செய்து முடிப்பீர்கள். நீண்ட நாளாக காணாமல் போன பொருள் கைக்கு வந்து சேரும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்வது நன்மதிப்பை ஏற்படுத்தும். கணவன் மனைவிக்குள் சிறுசிறு பிரச்சினைகள் வந்தாலும் அதனை சமாளித்து விடுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. எந்தவித செயலைத் தொடங்கினாலும் பெரியோர்களே ஆலோசித்து செய்வதன் மூலம் நன்மை ஏற்படும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். உங்களுக்கு தாய் தந்தையின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். நினைத்த காரியத்தை நினைத்த நேரத்தில் செய்து முடிக்கும் வல்லமை கொண்டவர். நிகழ்காலத் தேவைகள் பூர்த்தியாகும் வாய்ப்புகள் உள்ளது. குடும்பத்தில் உங்களின் பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் உண்டாகும். குலதெய்வ வழிபாடு செய்வதின் மூலம் நன்மை உண்டாகும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப பேச்சுவார்த்தைகள் முடிவாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. உங்களுக்கு இன்று மகிழ்ச்சி உண்டாகும் நாளாக அமைய போகிறது. நீண்ட நாளாக வராத கடன் தொகை கைக்கு வந்து சேரும். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் வரக்கூடும். பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் அக்கறை காட்டுவது மிகவும் நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய நாளாக இருக்கும். நீங்கள் நினைத்த அனைத்து காரியங்களும் நன்முறையில் நடந்து முடியும். மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவதில் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்களின் மூலம் பணவரவு உண்டாகும். சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். எந்த செயலை செய்தாலும் அதில் வெற்றி கொண்டீர்கள்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த விஷயத்தையும் சிந்தித்து செய்வது மிகவும் நல்லது. உங்களுக்கு இன்று ஓய்வெடுக்க முடியாதபடி பல வேலைகள் வந்து சேரும். உணவு கட்டுப்பாடு தேவை. திட்டமிட்ட காரியங்கள் சில தாமதமாக ஏற்படும். இன்று உங்களுக்கு சிறுசிறு பிரச்சினைகள் ஏற்படலாம். நீங்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும். பிறரை நம்பி எந்த ஒரு விஷயத்தையும் செய்ய வேண்டாம். பணம் விஷயத்தில் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. கடவுள் வழிபாடு நன்மையை தரும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணம் செலவு அதிகரிக்கும். சில சிக்கல்களிலிருந்து விடுபடுவீர்கள். பெற்றோரின் உடல்நலனில் அக்கறை கொள்வது மிகவும் நல்லது. வீடு வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் முடிவுக்கு வரும் கணவன் மனைவிக்குள் அன்பு உண்டாகும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரம் சுமாராக தான் இருக்கும். நீண்ட நாளாக வராத கடன் தொகை வந்து சேரும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாளாக இருந்த கவலைகள் தீரும். பொதுவாழ்வில் புகழ் உண்டாகும். உங்களுக்கு துணையாக நண்பர்களும் சகோதரர்களும் இருப்பார்கள். வியாபாரத்தில் வெற்றி காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. நீங்கள் செய்யும் அனைத்து விஷயங்களிலும் உங்களுக்கு வாழ்க்கைத்துணை உறுதுணையாக இருப்பார். உங்களுடைய பேச்சுக்கு மரியாதை ஏற்படும். எதை செய்தாலும் வெற்றி அடைவீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணவரவு திருப்திகரமாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரியங்கள் நடைபெறும். எந்த செயலை செய்தாலும் அதனை பலமுறை யோசித்து செய்வீர்கள். மனக் கவலைகள் அதிகமாக இருக்கும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் காட்டுவது மிகவும் நல்லது. பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். வியாபாரத்தில் சக ஊழியர்களிடம் அனுசரித்து நடப்பது மிகவும் நல்லது. கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் உண்டாகும். வெளிநாடு பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். எதை எடுத்தாலும் சிந்தித்து செயல்படுவீர்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.