இன்றைய ராசி பலன் – 23-01-2018

12-rasi

மேஷம்:
mesham

உங்கள் மனைவியின் வழி உறவுகளிடம் இருந்து எதிர் பார்த்த காரியம் கை கூடும்.வியாபாரத்தில் இன்று முன்னேற்றம் ஏற்படும்.லாபம் அதிகரிக்கும்.உங்கள் வாழ்க்கைத் துணையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.அரசு வேளைகளில் தாமதம் ஏற்படும்.அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு அதிகாரிகள் பாராட்டுவார்கள்.அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
நீண்டகாலமாக உள்ள நோய்களை மறந்துவிட முடியாது. அவை சில பிரச்சினைகளை உருவாக்கலாம். மற்றவர்களை இம்ப்ரஸ் செய்வதற்காக அதிகம் செலவு செய்யாதீர்கள். முதியவர் ஒருவரின் ஆரோக்கியம் சிறிது கவலை தரலாம். உங்கள் மனதில் வேலை குறித்த எண்ணம் ஆக்கிரமித்திருந்தாலும் உங்களுடைய அன்புக்குரியவர் அதீதமான ரொமாண்டிக் ஆனந்தத்தைத் தருவார்.

மிதுனம்:இன்று மகிழ்ச்சியானா நாள்.பெற்றோரிடம் இருந்து நல்ல செய்தி வரும்.சில விசயங்களை யோசித்து முடிவு எடுத்துங்கள்.வீண் அலைச்சலுகைளை குறைத்து கொள்ளுங்கள்.அலுவலக பணிகளில் கவனம் செலுத்துங்கள்.வியாபாரத்தில் லாபத்துடனும் மற்றும் செலவுகளும் ஏற்படும்.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களைத் குறைத்து கொள்ளவும்.

கடகம் :
Kadagam
உங்களின் நம்பிக்கை வாசனை மிக்க மலரைப் போல, வாசனை திரவியத்தைப் போல மலரும். எதிர்பாராத பில்கள் உங்கள் நிதிச் சுமையை அதிகரிக்கும். நட்பாக இருக்கும் புதியவர்களிடம் உரிய தூரத்திலேயே இருங்கள். அர்ப்பணிப்புள்ள மற்றும் கேள்விக்கு இடம் தராத காதலுக்கு ஒரு மந்திரம் நிறைந்த கிரியேட்டிவ் சக்தி உண்டு.

சிம்மம்:
simam
உங்கள் முயற்சிக்கு குடும்பத்தில் வரவேற்பு கிடைக்கும்.மனைவியுடன் சில மண கசப்புகள் ஏற்பட்டு விலகும்.அரசு பணிகளை செய்யும் பொது பொறுமையை கடைபிடியுங்கள்.அலுவலகத்தில் வழக்கம்போல் பணிகளை செய்விர்கள்.உறவினர்களிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும்.மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மனைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

கன்னி:

மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடிய வகையிலான பொய்யான தகவல் கிடைக்கலாம். இன்றைக்கு வாழ்ந்தால் போதும் என்ற எண்ணத்தையும், அதிகமான நேரத்தையும் பணத்தையும் பொழுதுபோக்கில் செலவிடுவதையும் கட்டுப்படுத்துங்கள். உங்கள் கருத்தை சரியாகக் கூறாத காரணத்தால் பெற்றோர் உங்களை தவறாகப் புரிந்து கொள்ளக் கூடும். கருத்தை சரியாகத் தெரிவிப்பதை உறுதி செய்யுங்கள். ரொமாண்டிக் உறவு இன்று பாதிக்கப்படும்.

இதையும் படிக்கலாமே:தை மாத ராசி பலன்

துலாம்:

சிலர் வெளியூர் பயணம் செய்து,அங்கிருக்கும் கோயில்களை தரிசிக்க வாய்ப்பு உண்டாகும்.பிள்ளைகள் மூலம் செலவு ஏற்படும்.வழக்கமான வேளைகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.வியாபா ரத்தில் வியாபாரத்தில் எதிர் பார்த்த லாபம் கிடைக்கும்.அலுவலக வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பிர்கள்.விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு இன்று மகிழ்ச்சி தரும் சம்பவம் ஒன்று நிகழும்.

விருச்சிகம்:

குழந்தைகளின் திறமை வெளிப்பாடு ஆழ்ந்த மகிழ்ச்சியைத் தரும். பணத்தில் தாராளமாக இருந்தால் உங்களை மலிவானவராக எடுத்துக் கொள்வார்கள். குடும்பத்தினரின் நகைச்சுவையான இயல்பு வீட்டில் சூழ்நிலையை கலகலப்பாக்கும். உங்கள் காதல் வாழ்வில் இன்று மிக அருமையான நாள். கூர்மையாக கவனிக்கும் திறன் மற்றவர்களைவிட நீங்கள் முன்னே செல்ல உதவியாக இருக்கும்.

தனுசு:

இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். வெளியூர்களில் இருந்து நல்ல தகவல் வரும். செலவுகளைச் சமாளிக்கக் கடன் வாங்க நேரும். பயணத்தின்போது கவனமாக இருக்கவேண்டியது அவசியம். உறவினர்களால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணலாபம் உண்டாகும்.

மகரம்:
magaram
சுய மேம்பாட்டுத் திட்டங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் பலன் கொடுக்கும். உங்களைப் பற்றி நன்றாகவும் நம்பிக்கையாகவும் உணர்வீர்கள். நாளில் பொழுதைக் கழிக்கும் முறை மற்றும் பொழுதுபோக்கில் அதிகம் செலவிடுதலில் ஜாக்கிரதையாக இருங்கள். உங்களை மகிழ்வாக வைக்கும் செயல்களைச் செய்யுங்கள். ஆனால் மற்றவர்களின் விஷயங்களில் இருந்து தள்ளியே இருங்கள்.

கும்பம்:

தொலைதூரத்தில் இருந்து வரும் செய்தி உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். . வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் ஆதாயம் உண்டாகும்.

மீனம்:

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வரும். வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே விற்பனையும் லாபமும் கிடைக்கும். மாலையில் நீண்டநாள்களாக பார்க்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.