இன்றைய ராசி பலன் -23-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham

தந்தை வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் சுலபமாக முடியும். அலுவலகத்தில் கூடுதல் பணிச்சுமையால் சற்று சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்:
rishabam
வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியம் நடக்கக்கூடும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். தாய் வழி உறவுகளால் நன்மை உண்டாகும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே அமையும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள்.

மிதுனம்:
அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாக முடியும். தந்தை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிகள் கூடுதலாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இருக்கும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

கடகம் :
Kadagam

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் தேவைகளை நிறைவேற்றும் நாளாக அமையும். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

சிம்மம்:
simam
அனுகூலமான நாள். விரும்பிய புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத பணம் வந்து சேரும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படும். சகோதரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரம் மந்தமாகத்தான் இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். அரசாங்கம் சார்ந்த பணிகள் அனுகூலமாக முடியும். குடும்பத்தாருடன் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். திடீர் பயணம் ஏற்படும். அலுவலகத்தில் அதிகாரிகளால் பாராட்டுபெறுவீர்கள். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியை தவிர்ப்பது நல்லது.

துலாம்:

மகிழ்ச்சியான நாள். பிள்ளைகளால் தலை நிமிர்ந்து நிர்பீர்கள். பெற்றோர்களின் உதவியை நாடி செல்விர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரக்கூடும். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். தாய்மாமன் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சி உண்டாகும்.

- Advertisement -

விருச்சிகம்:

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாருடன் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

இதையும் படிக்கலாமே :
மாசி மாத ராசி பலன்

தனுசு:

அனுகூலமான நாள். தாய்வழி உறவுகளால் நன்மைகள் உண்டாகும். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். இன்று பள்ளி நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களால் புதிய நண்பர்களும் அறிமுகம் ஆவார்கள். குடும்பத்தாருடன் ஆலோசனை செய்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

மகரம்:
magaram
அலுவலக பணிகளில் உற்சாகமாக செயல்படுவீர்கள். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகள் செய்ய வேண்டாம். குடும்பத்தாருடன் கோவில்களுக்கு செல்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் பணியாளர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.

கும்பம்:

அனுகூலமான நாள். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தாரின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். அலுவலகத்தில் பணிச்சுமை கூடுதலாக இருக்கும். தாய்வழி சொந்தகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில், எதிர்பார்த்ததை விட லாபம் கூடுதலாக இருக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மீனம்:

தன்னபிக்கையுடன் காணப்படுவீர்கள். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். உறவினர்கள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வீர்கள். தந்தை வழி உறவுகளால் நன்மை உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேர தாமதமாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய முயற்சிகளால் ஆதாயம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -