இன்றைய ராசி பலன் – 23-04-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வராது என்று நினைத்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். சிறிய அளவில் மன உளைச்சல் ஏற்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வெளிநாடுகளில் இருந்து நல்ல செய்தி வந்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். அறிவுப் பூர்வமான பேச்சால் மற்றவர்களுக்கு ஆறுதல் தருவீர்கள். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

Mithunam Rasi
விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு.திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
புதிதாகத் தொடங்கும் காரியங்களை காலையிலேயே தொடங்குவது நல்லது. எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்:

simmam
அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வேலையின் காரணமாக சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அவர்களால் பெருமை ஏற்படும். முயற்சிகளில் வெற்றியும் பண லாபமும் உண்டாகும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறுவீர்கள். இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் ஏற்படும்.

துலாம்:

Thulam Rasi
அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

Virichigam Rasi
காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். இன்றைக்கு புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடுவது நல்லது. அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasi
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். அவசியத் தேவைகளுக்கு கடன் வாங்க நேரும். நண்பர்களிடம் இருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்:

Magaram rasi
இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்தி கிடைத்து உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். குடும்பத்துடன் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பிற்பகலுக்குமேல் வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கப்பெறுவீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

கும்பம்:

Kumbam Rasi
சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். அலுவலகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தள்ளிப் போகும். காலையில் அன்றாட பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்:

Meenam Rasi
உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

- Advertisement -