இன்றைய ராசி பலன் – 23-05-2018

12-rasigal

மேஷம்:

Mesham Rasi
இன்று உங்கள் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும்.

தினசரி தமிழ் காலண்டர் 2018 குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

ரிஷபம்:

Rishabam Rasi
எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும் பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தியைக் கேட்பீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

மிதுனம்:

- Advertisement -

midhunam
நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாகச் செயல்பட்டு அதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கடகம்:

Kadagam Rasi
காலைப் பொழுது இதமாக விடியும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். சக பணியாளர்களின் உதவியால் மனதில் உற்சாகம் ஏற்படும்.

சிம்மம்:

simmam
இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக விடியும். எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். பிற்பகலுக்குமேல் வாழ்க்கைத் துணை வழியில் ஆதரவும் ஆதாயமும் உண்டாகும்.

கன்னி:

Kanni Rasi
இன்று முயற்சி செய்யும் காரியங்கள் அனுகூலமாக முடியும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர வகையில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை மந்தமாகத்தான் இருக்கும்.

துலாம்:

Thulam Rasi
இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அலுவலகத்தில் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு மனதுக்கு ஆறுதல் தரும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும்.

விருச்சிகம்:

virichigam
இன்று மகிழ்ச்சியான நாளாக அமையும். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்வது அவசியம். அறிவுபூர்வமான பேச்சால் மற்றவர்களைக் கவருவீர்கள். ஆடம்பரப் பொருள்கள் வாங்குவீர்கள்.

தனுசு:

Dhanusu Rasi
இன்று வழக்கமான பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த செய்தி வரும். அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள்.

மகரம்:

Magaram rasi
சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிப்பதால், நேரத்துக்குச் சாப்பிடமுடியாது. மாலையில் உறவினர்கள் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi
பணப்புழக்கம் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். மனதுக்கு இனிய செய்தியைக் கேட்பீர்கள். அலுவலகத்தில் சுறுசுறுப்பாக பணி செய்வீர்கள். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும்.

மீனம்:

meenam
இன்று நீங்கள் அன்றாடப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்தவும். நண்பர்களிடம் கேட்ட உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் அதிகாரிகளின் பாராட்டுகள் மனதுக்கு உற்சாகம் தருவதாக இருக்கும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என் நம்புகிறோம்.