இன்றைய ராசி பலன் – 23-1-2020

rasi palan - 23-1-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கிறது. புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நீடித்திருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் நன்மை உண்டாகும். உயர்கல்வி பயில்வோர் மற்றும் வெளிநாடு செல்வதற்கான முயற்சி செய்து கொண்டிருப்போர் நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சில வேலைகள் வெற்றிகரமாக முடியும். வாகன வகையில் ஒரு சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு உண்டாகலாம் எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். சகோதர சகோதரிகளின் மூலம் நன்மைகள் வந்தடையும். வெளிநாடுகளில் வசிப்போர் தாய் நாடு திரும்புவதற்கான விஷயங்களில் சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பெண்களின் சுய தொழில் முன்னேற்றம் நல்ல நிலையில் இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் அமோகமான வெற்றி கிட்டும். பொருளாதார பற்றாக்குறை ஓரளவு குறைவதற்கான சாத்தியக்கூறு உண்டு. கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பங்கு சந்தை வியாபாரத்தில் ஏற்றத்துடன் காணப்படும். ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன எனவே எச்சரிக்கை தேவை. குடும்பத்திலுள்ளவர்களிடம் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. பெற்றோர்களின் உடல்நலனில் அக்கறை தேவை.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் தாமதமானாலும் நல்லபடியாக முடிவடையும். பங்கு சந்தை, கலைத் துறையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாண்டு வாடிக்கையாளர்களை கவருவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். கல்வி விஷயமாக வெளிநாடு வாய்ப்புகள் உருவாவதற்கான சூழ்நிலை நிலவுகின்றன. மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையப் பெரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சுயமாக முடிவெடுப்பது நல்லது. குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் வந்து பின் மறையும். கணவன் மனைவியிடையே அன்னோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். குறித்த நேரத்திற்குள் கொடுத்த வேலைகளை முடிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் கிட்டும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணப்படும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். வாகன வகையில் ஆதாயம் உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளை சற்று தள்ளிவைப்பது நல்லது. குடும்ப நபர்களினால் மன உளைச்சலுடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத வரவுகள் வந்து சேரும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உயர்கல்வி பயில்வோருக்கு எடுத்த காரியங்கள் நிறைவேறும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்பு ஒரு சிலருக்கு அமையப் பெறும். வழக்குகள் தாமதமாகும். பூர்வீக சொத்துகளால் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் மன மகிழ்ச்சி கிட்டும். குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி குவிக்கும் யோகம் உண்டு. வாகன வகையில் சில சிக்கல்கள் ஏற்படலாம். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தொலைதூரப் பயணங்களால் ஆதாயம் உண்டு. கலைத்துறை மற்றும் மருத்துவத் துறையில் உள்ளவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் சற்று தாமதம் ஏற்படும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான யோகமுண்டு. நண்பர்களால் தொழில்துறையில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டு முன்னேற்றம் அடைவீர்கள். கல்வியில் மாணவர்களுக்கு கூடுதல் அக்கறை தேவை. எதிர்பார்த்தபடியே தனவரவு திருப்திகரமாக இருக்கும். நிர்வாகத்தில் மற்றும் கூட்டுத்தொழில் முயற்சியில் வெற்றி கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி உண்டு. மூன்றாம் நபர்களிடம் எச்சரிக்கை தேவை.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகளாக மாறும். உற்ற நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடு நிலவும். அதனால் நிம்மதியின்றி காணப்படுவீர்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்கும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். பெண்களில் சுயதொழில் புரிவோர் ஏற்றத்துடன் காணப்படுவீர்கள். கூட்டுத்தொழில் பலன்தரும். பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட சமாளிப்பீர்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் லாபகரமாக இருக்கும். வியாபாரம் தொடர்பாக திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உடன்பிறந்தவர்களால் ஆதாயம் கிட்டும். ஆரோக்கியத்தில் சிறுசிறு கோளாறுகள் ஏற்பட்டு செலவுகள் செய்யும் நிலை ஏற்படலாம். மாணவர்களின் கல்வி நிலை முன்னேற்றகரமாக இருக்கும். உயர்கல்வி பயில்வோர் தொழிற் துறை சார்ந்த முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்தி கிட்டும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். பொருளாதாரத்தில் ஏற்றத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். வியாபாரம் விருத்தி பெறும். வழக்குகள் வெற்றி தரும்.. பூர்வீக சொத்து பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய நிலை வரலாம்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். தனவரவு திருப்திகரமாக அமையும். மாணவர்களின் கல்வி நிலை சிறப்பாக இருக்கும். அரசு வழி பிரச்சனைகள் முடிவு பெரும். உறவினர்களால் சில மன சங்கடங்கள் ஏற்படலாம். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டு. சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளையார் வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக்கித் தரும்.

- Advertisement -