இன்றைய ராசி பலன் – 23-4-2020

rasi palan - 23-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் பண உதவி கிடைக்கக்கூடும். நண்பர்களை முழுமையாக நம்பிக்கொண்டிருக்க வேண்டாம். ஆடை ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் இருந்தாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்துவிடுவீர்கள்.வியாபாரத்தில் வேலையாட்களிடம் பிரச்சனைகள் ஏற்படுவதால் வளைந்து கொடுத்துப் போவது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் தன்னம்பிக்கையும் துணிச்சலும் அதிகரிக்கும் நாள். சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும். புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளது. தாய்வழி உறவினர்களால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அமோகமான நாளாக அமையப்போகிறது. எதிர்பாராத இடத்தில் பணம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும். திருமணம் தடை நீங்கும். மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. உத்யோகத்தில் உங்களுடைய வருமானம் உயர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த காரியங்கள் நிறைவேறும் நாள். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் அனுசரணையாக செல்வது நல்லது. வீண் செலவுகள் அதிகரிப்பதால் செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்களிடம் இருந்த பிரச்சனைகள் விலகும். நீங்கள் எதிர்பார்த்த பணம் தேவைகள் பூர்த்தி அடையும். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள்.தாய்வழி உறவினர்கள் வருகையால் செலவுகளும் அலைச்சலும் ஏற்படக்கூடும்.குடும்பத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். புது வேலை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. மேற்படிப்பு படிப்பதற்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உள்ளது. கொடுத்த பழைய கடன் திரும்ப கைக்கு வந்து சேரும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியமும் தன்னம்பிக்கையும் கூடும் நாள். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளுக்கு குடும்பத்திலுள்ளவர்களிடம் கலந்து பேசி அதற்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். எதிர்பாராத நட்பு கிடைக்கும்.உத்யோகத்தில் உங்கள் செயலுக்கு மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக அமையப்போகிறது. குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஒத்துழைத்து போவதன் மூலம் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பழைய பிரச்சனைகள் அனைத்தும் தீரும். உத்யோகத்தில் உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிக அளவில் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்படும். நீங்கள் எதைப் பேசினாலும் மற்றவர்கள் அதை தவறாக புரிந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். உணவு உட்கொள்வதால் சிறிது உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. திருமணப் பேச்சுகள் கைகூடும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் வெற்றி அடைவீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைகளை தாண்டி முன்னேறும் நாள். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சகோதரர்களால் சிறிது மனஸ்தாபங்கள் ஏற்படும். உணவு உட்கொள்வதில் சிறிது கவனம் தேவை. வியாபாரத்தில் புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.நீங்கள் வீட்டு மனை வாங்குவது விற்பது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டாலும் அதில் வெற்றி அடைவீர்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங்களை கேட்டறிந்து அதை பூர்த்தி செய்வீர்கள். சகோதரர்களுக்காக செலவுகளைச் செய்து மகிழ்ச்சி அடைவீர்கள். வீட்டை அழகுபடுத்துவதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணத் தடை நீங்கும். கர்ப்பிணி பெண்களின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் உங்களின் திறமைகளை தெரியப்படுத்துவது மூலம் மேலதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு வளர்ச்சி கூடும் நாளாக உள்ளது. நண்பர்கள் உங்களின் பலவீனத்தை உணர்த்துவார்கள்.புதிய வாகனம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பழைய கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை உண்மையாக நம்பி பொறுப்புகளை கொடுப்பார். ஆகவே அவர்களிடம் கவனமாக இருப்பது மிகவும் நல்லது. சிறிது அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமையும். கணவன்-மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். எதிர்பார்த்த இடத்தில் பணம் கைக்கு வரும். உத்யோகத்தில் புது அனுபவம் உண்டாகும். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தெய்வீக அனுகூலம் உண்டாகும். உங்கள் மனதில் இருக்கும் விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் உங்களுடைய பேச்சு சிறு மனக்கசப்பு ஏற்படும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -