இன்றைய ராசி பலன் – 23-06-2021

rasi palan - 23-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததை சாதித்து காட்ட கூடிய நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கும். சுயதொழிலில் எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகம் இருப்பதால் டென்சனுடன் காணப்படுவார்கள். ஆரோக்கியம் சீராகி வரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்க விட்டுக்கொடுத்து செல்வீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரும் வகையில் அமையும். உத்யோகஸ்தர்களுக்கு சக பணியாளர்கள் மூலம் அற்புதமான பலன்களை வரக்கூடிய வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் மேம்படும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்கையே தனக்குதவி என்பதற்கு ஏற்ப யாரையும் எதிர்பார்க்காமல் சுய முயற்சியால் வெற்றியைக் காண்பீர்கள். சுயதொழிலில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய நட்பு வட்டம் விரியும் வாய்ப்புகள் அமையும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நினைத்த இடத்தில் இருந்து பண வரவு உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைப்பதை விட அதிரடி மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வருமானம் பெருகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொண்டு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் நண்பர்களை சந்திக்கும் வாய்ப்புகள் உண்டு. தந்தை வழி உறவினர்களின் மூலம் தேவையற்ற பிரச்சனைகளை சந்திக்கலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுமானவரை உங்களுக்கு சம்பந்தமில்லாத இடங்களுக்கு செல்வதை தவிர்க்கவும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் மனக்குழப்பம் தீர குடும்பத்தில் இருப்பவர்களின் ஆலோசனை தேவைப்படும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இது வரை இருந்து வந்த பிரச்சினைகளுக்கான நல்ல தீர்வு கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களின் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுயதொழில் எதிர்பார்க்கும் லாபம் உண்டாகும். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் வலுவாகும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் அறிந்து சிலர் கவிழ்க்க பார்ப்பார்கள். எத்தகைய தடைகளையும் எதிர்த்து வீர நடை போடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தொழில் ரீதியான உங்கள் பிடிவாதத்தை தளர்த்தி கொள்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடையில்லாத சுபகாரிய முயற்சிகளில் வெற்றியை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற வீண் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உங்களுடைய கடின உழைப்பும் முன்னேற்றத்தை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கமாக செல்வது நல்லது. கோபத்தை குறைத்துக் கொள்ளாவிடில் வீண் விரயங்களை சந்திப்பீர்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு காலதாமதமான பலன்கள் கிடைக்கும். சாதகமற்ற அமைப்பு என்பதால் வாகன ரீதியான பயணத்தில் சற்று எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். சுய தொழிலில் இருப்பவர்கள் ஏற்றம் தரும் வகையிலான அமைப்பை கொண்டுள்ளீர்கள். ஆரோக்கியம் கவனம் தேவை.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நியாயமாக நடந்து கொள்வீர்கள். உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகள் மற்றவர்களுக்கு பலன் தரும் வகையில் அமைய வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போடுவதில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடன் இருந்து கொண்டே உங்களை பற்றிய அவதூறுகளை சிலர் பரப்பி கொண்டிருப்பார்கள். எதிலும் பொறுமை தேவை.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் குதூகலம் காணப்படும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்ட சில காரியங்களை செய்து முடிக்க வேண்டும் என்று தீர்க்கமாக இருப்பீர்கள். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி காணும். குலதெய்வ அருள் பெற குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.

- Advertisement -