இன்றைய ராசி பலன் – 24-05-2018

12-rasigal
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். அன்றாடப் பணிகளில் உற்சாகத்துடன் ஈடுபடுவீர்கள். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டு.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். உங்கள் தேவையறிந்து மற்றவர்கள் உதவி செய்வார்கள். நண்பர்களின் சந்திப்பும் அவர்களால் ஆதாயமும் உண்டாகும். நேரத்துக்குச் சாப்பிட முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, வாழ்க்கைத்துணையின் தேவைகளை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

மிதுனம்:

midhunam
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். சிலருக்கு அலுவலகப் பணியின் காரணமாக வெளியூர்ப் பயணங்களை மேற்கொள்ள நேரிடும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சியில் ஈடுபடுவதையும் பயணங்களையும் தவிர்க்கவும்.

தினசரி தமிழ் காலண்டர் 2018 குறிப்புகளை அறிய இங்கு கிளிக் செய்யவும்.

- Advertisement -

கடகம்:

Kadagam Rasi
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். உறவினர்களால் மனச் சங்கடம் ஏற்படக்கூடும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தை வழியில் ஆதாயம் கிடைக்கும்.

சிம்மம்:

- Advertisement -

simmam
புதிய முயற்சிகளில் ஈடுபடாமல், வழக்கமான பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். வாழ்க்கைத்துணை வழியில் அனுகூலமான தகவல் வந்து சேரும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் செல்ல நேரிடும். மாலையில் உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டு. மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்கள் வகையில் ஆதாயம் ஏற்படக்கூடும்.

கன்னி:

Kanni Rasi
மாலையில் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. பிள்ளைகளிடம் அதிகக் கண்டிப்பு காட்டவேண்டாம். நண்பர்கள் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

துலாம்:

Thulam Rasi
இன்று எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். காரிய அனுகூலம் உண்டாகும். உறவினரிடமிருந்து எதிர்பார்த்த தகவல் வந்து சேரும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் அனுகூலம் உண்டாகும்.

விருச்சிகம்:

virichigam
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். எதிர்பாராத பொருள்வரவுக்கும் இடம் உண்டு. மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் அதிஷ்டான தரிசனம் கிடைக்கும்.

தனுசு:

Dhanusu Rasi
இன்று புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மாலையில் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு சிலருக்கு அமையும். பணப் பற்றாக்குறை ஏற்படும் என்பதால் கடன் வாங்கவும் நேரும். உறவினர் மற்றும் நண்பர் வீட்டு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

மகரம்:

Magaram rasi
இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். குடும்பப் பொறுப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தவும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் லாபம் உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதகமாக முடியும். புதிதாகத் தொடங்கும் காரியங்களைக் காலையிலேயே தொடங்குவது நல்லது. சிலருக்கு வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். மனம் உற்சாகமாகக் காணப்படும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

மீனம்:

meenam
இன்று நீங்கள் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. அரசாங்கக் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்கள் வருகை மகிழ்ச்சி தரும்.

உங்களுடைய இந்த நாள் இந்த ராசி பலன் மூலம் மேலும் சிறப்படையும் என்று நம்புகிறோம்.

- Advertisement -