இன்றைய ராசி பலன் – 24-1-2020

rasi palan - 24-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். வியாபாரம் விருத்தி பெறும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. குடும்பத்தில் அமைதி நிலவும். பொருளாதார முன்னேற்றம் காணப்படும். தம்பதியரிடையே நல்லிணக்கம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும். வாகன வகையில் ஆதாயம் பெறுவீர்கள். குடும்பத்தில் மூத்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடையும். உத்தியோக உயர்வு கிடைப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். கணவன் மனைவி ஒற்றுமை பலப்படும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். குடும்ப நபர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகமாகக் கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் உங்களுடைய மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரம் செய்பவர்களுக்கு பல புதிய தொழில வாய்ப்புகள் கிட்டும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். வெளியிடங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவதன் மூலம் மன நிம்மதி கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருக்கும் காரியங்கள் வெற்றிகரமாக முடியும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வீண் விரயங்கள் உண்டாவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. உயர்கல்வி பயில்வோருக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். சமூக சிந்தனையில் மூழ்கி இருப்பதற்கான சூழ்நிலை நிலவும். சமூகத்தின் மீது அக்கறை கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். கல்விக்காக செலவுகள் செய்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படாமல் இருப்பதற்கு ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. ஒரு சிலருக்கு நவீன வகை தொழில் நுட்ப சாதனங்களை வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். வழக்குகளில் சாதகமான பதில் வரும். வீண் விரயங்களை தவிர்த்து சுபச் செலவுகளை மேற்கொள்வதால் பயன்பெறலாம். பத்திரிக்கை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாக இருக்கும். ஆடை ஆபரண சேர்க்கை பெண்களுக்கு உண்டாகும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்ததொரு நாளாக அமைந்திருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் இனிதே நடந்தேறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிர்வாகத்தில் நல்ல பெயரை பெற்றுத்தரும். தொலைதூர பிரயாணங்கள் வெற்றியை தரும். அரசு காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். சக பணியாளர்களிடத்தில் நட்பு பாராட்டுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு அலைச்சல் அதிகமாக இருக்கும் இருப்பினும் அதனால் ஆதாயம் உண்டாகும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமுடன் காணப்படும் நாளாக இருக்கும். உங்களின் நகைச்சுவை உணர்வால் பலரின் பாராட்டை பெறுவீர்கள். வெளிநாடு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும். திடீர் பயணங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. திருமணம் போன்ற சுபகாரிய பேச்சுக்கள் வெற்றி அடையும். ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன்-மனைவி இடையே அன்னியோன்யம் அதிகரிக்கும். உங்களின் கடின முயற்சியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் ஈடுபட்டவர்களுக்கு வெற்றி கிட்டும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக தொடங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் கடின முயற்சியால் வெற்றிகள் குவியும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். புதிய மாற்றங்கள் செய்து முன்னேற்றம் காணலாம். குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது சிறந்தது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் காலதாமதம் ஆனாலும் வெற்றி கிடைக்கும். கூட்டு முயற்சிகள் பலன் தரும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்து இடுவது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. ஜாமீன் போடுவதில் கவனம் தேவை. வீண் அலைச்சல்களால் மன சோர்வு உண்டாகும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை உண்டாகலாம். அரசு துறை தேர்வுகள் எழுதி இருப்போருக்கு நல்ல முடிவுகள் வந்து சேரும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமையோடு இருப்பது நல்லது. தொலைதூர பிரயாணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பிரயாணங்களின் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வி நிலை உயரும். கணவன் மனைவியிடையே கருத்துவேறுபாடு நிலவும். மனம் விட்டு பேசுவது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக தொடங்கவிருக்கிறது. சுயதொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு பல புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். வழக்கு தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் சுபமாக முடியும். மாணவர்களின் கல்வித் திறன் மேம்படும். எனினும் கல்வியில் கவனம் வேண்டும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் ஒரு சிலருக்கு அமையலாம். கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் உருவாகலாம். எச்சரிக்கை தேவை. பொருளாதாரத்தில் ஏற்றம் காண்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய முயற்சிகளால் முன்னேற்றம் காண்பீர்கள். தனவரவு எதிர்பார்த்த படி திருப்திகரமாக அமையும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகக்கூடும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஒரு சிலருக்கு உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிட்டும். கணவன் மனைவி உறவு பலப்படும். மனதுக்கு பிடித்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகலாம். அரசுத்துறையில் நடைபெறவிருந்த காரியங்கள் எளிதில் முடிவடையும். உங்கள் திறமைக்கேற்ப பாராட்டுகள் குவியும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான மனோநிலை உருவாகலாம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். கணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். வீண் விரயங்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. வெளிநாடு வேலை வாய்ப்புகள் கிடைக்க பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. அரசு தொடர்பான விஷயங்கள் வெற்றி பெறும். நீண்ட நாட்களாக நிலுவையிலுள்ள வேலைகள் நல்லபடியாக முடியும். குழந்தைகளால் மன மகிழ்ச்சி ஏற்படலாம். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் கவனம் தேவை. பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்டநாள் எதிர்பார்த்து காத்திருந்த சுபச் செய்திகள் கைகூடிவரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படும். பல முக்கிய முடிவுகளை பற்றிய சிந்தனையில் இருப்பீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவும். சகோதர சகோதரிகளுடன் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். புதிய தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணவரவு திருப்திகரமாக இருக்கும். கடன் பாக்கிகள் வசூலாகும். மாணவர்களுக்கு கல்வி நிலை மேம்படும். உயர்கல்வி படிக்க கூடியவர்களுக்கு முன்னேற்றம் உண்டு.