இன்றைய ராசி பலன் – 24-12-2019

rasi palan - 24-12-2019
- Advertisement -

மேஷம்:
அனாவசியமான சிந்தனைகளால் மன இறுக்கத்திற்கு ஆளாகக்கூடிய ஒரு நாளாக இருக்கும். இன்றைய தினம் நீங்கள் யாரிடமும் கோபப்படாமல் அமைதியாக இருப்பது நல்லது. பணிகள் தாமதமாக கூடிய வாய்ப்புகள் இருப்பதால் கடுகடுப்புடன் நடந்துகொள்வீர்கள். அமைதியாக இருப்பது நல்லது. மனதை அமைதியாக வைத்துக் கொள்வதற்கு ஆனைமுகனை வழிபடுவது பலன் தரும்.

ரிஷபம்:
இன்றைய தினம் உங்களின் நம்பிக்கையே உங்களது பலமாக விளங்கும் நாளாக இருக்கும். உங்கள் திட்டமிட்டு செயல்படும் திறமையால் பல கடினமான விஷயங்களையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். கணவன்-மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
இன்றைய தினம் உங்களுக்கு இனிய நாளாக அமையும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த பண வரவு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும். விடாமுயற்சியால் முன்னேற்றப் பாதைக்கு செல்வீர்கள். உங்களை நம்பி முக்கியமான பொறுப்புகளை ஒப்படைத்தவர்களுக்கு விசுவாசமாக இருப்பீர்கள். உங்களின் வாழ்க்கை துணை உங்களை புரிந்து நடந்து கொள்வார்கள்.

கடகம்:
இன்றைய தினம் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். தம்பதியரிடையே ஒற்றுமை பலப்பட ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்வது நல்லது. எதையும் திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.

- Advertisement -

சிம்மம்:
இன்று குடும்ப பிரச்சனைகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். மூன்றாம் நபர்களிடமிருந்து விலகியிருப்பது நல்லது. எதையும் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதே நலம் தரும். ஸ்ரீகிருஷ்ணரை வழிபடுவதன் மூலம் இன்றைய நாளை சிறப்பாக அமைத்துக்கொள்ள முடியும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கன்னி:
இன்றைய தினம் நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாக அமையும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உங்களின் திறமைக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் வீடு தேடி வந்து சேரும். இனிய நாளாக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
இன்றைய தினம் வீண் விரயங்கள் உண்டாகி குழப்பத்தில் ஆழ்ந்து இருக்கக் கூடிய ஒரு நாளாக இருக்கும். அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பலன்களை காணலாம். சேமிப்பின் முக்கியத்துவத்தை உணரும் நாளாக இருக்கும். அம்பிகையை வழிபடுவதன் மூலம் சிறப்பான நாளாக அமைத்துக்கொள்ள முடியும்.

விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்கு அதிக கோபத்தை ஏற்படுத்தக் கூடிய நாளாக இருக்கும். எனவே எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களின் முன்கோபத்தால் நன்மதிப்பு பாதிக்கப்படும் நிலை உருவாகலாம். யோகா தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. எப்போதும் முக மலர்ச்சியுடன் இருப்பதை கடைபிடிக்க முயற்சி செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

தனுசு:
இன்றைய நாள் உங்களது முயற்சிகளுக்கு முட்டுக்கட்டையாக பல தடைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுப்பது சிறந்த நாளாக மாற்றியமைக்க உறுதுணையாக இருக்கும். எந்த முக்கிய முடிவுகளையும் இன்றைய தினம் நீங்கள் எடுக்காமல் இருப்பது நல்லது.

மகரம்:
இன்றைய உங்களின் சில நல்ல பழக்கவழக்கங்களால் சிறப்பான பலன்களை அடையப் பெறும் இனிமையான நாளாக இருக்கும். பலருக்கு முன் உதாரணமாக திகழ்வீர்கள். புதிய வாய்ப்புகளை புறக்கணிக்காமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும்.

கும்பம்:
இன்று உறவினர்களின் திடீர் வருகையால் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். எதிர்பாராத சில விஷயங்கள் நடைபெற்ற மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். பலரின் பாராட்டுகளைப் பெற்று உற்சாகமாகக் இருப்பீர்கள். கணவன்-மனைவியிடையே அன்னோன்யம் நிலைத்திருக்கும். எம்பெருமான் ஈசனை வழிபடுவதன் மூலம் பலன் காணலாம்.

மீனம்:
இன்று எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களை சுற்றியிருப்பவர்களில் யார் உங்களுக்கு எதிராக இருப்பவர்கள் என்ற குழப்பம் நிறைந்திருக்கும். இதனால் மனதில் அமைதி இருக்காது. துர்க்கை வழிபாடு இன்றைய நாளை சிறப்பாக அமைக்க உறுதுணையாக விளங்கும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

- Advertisement -