இன்றைய ராசி பலன் – 24-3-2020

rasi palan - 24-3-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உத்தியோகத்தில் உள்ளவர்கள், விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு ஆகிய நன்மைகளை அடைவார்கள். எனினும் இதற்கு உங்கள் கடுமையான முயற்சிகள் தேவைப்படும். தொழில் செய்பவர்கள், வேகமான வளர்ச்சி காண வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு புதிய வாய்ப்புகள் கிடைப்பதுடன், பழைய பாக்கிகளும் வசூலாகி, உங்களை உற்சாகப்படுத்தும். எனினும் சில தேவையற்ற செலவுகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே எச்சரிக்கையாக இருந்தால் அதைத் தவிர்க்கலாம். பெண்களின் தேவைகள் யாவும் பூர்த்தியாகும் என்பதால், மகிழ்ச்சிக்குக் குறைவிருக்காது. மாணவர்கள் படிப்பில் ஊக்கமாகவும், உற்சாகமாகவும் ஈடுபடுவீர்கள். போட்டி, பந்தயங்களில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு விலகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்த்து காத்திருந்த இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கப்பெறும். ஒரு சிலருக்கு மாறுதலாக கிடைத்த இடம், விருப்பமில்லாததாக இருந்தாலும் கூட, அங்கேயும் உங்களுடைய தனித்திறமையைக் காட்டுவீர்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் அபரிமிதமாக முன்னேற்றத்தைக் காணப்போகிற காலகட்டம் இது. வாடிக்கையாளர்களின் திருப்தியை மனதில் கொண்டு செயல்படுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம், மிகவும் திருப்தியான லாபம் தரும் வகையில் நடைபெறும். மாணவர்கள் எல்லோரிடமும் நற்பெயர் பெறும் அளவுக்கு, படிப்பில் முன்னேறுவார்கள்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிலருக்கு அதிக வருமானங்கள் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர் அதிகாரிகளின் பாராட்டும், சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் காண முடியும். சில பெரிய மனிதர்களின் ஒத்துழைப்பு, அந்த வளர்ச்சிக்கு பக்கபலமாக அமையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், வியாபாரத்தை விருத்தி செய்து கொள்வதற்கான முயற்சியை மேற்கொள்ளலாம். குடும்பத்துடன் ஆன்மிகப் பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு திடீர் தன வரவுகள் ஏற்படும். நிதானத்துடன் நடந்து கொள்வது, நன்மைகளை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் அன்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றையும், சிலர் ஊதிய உயர்வையும் அடைவர். மன மகிழ்ச்சியாக பணியாற்றும் வகையில் அலுவலகச் சூழல் அமையும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவதுடன், மதிப்பெண்களைப் பெறுவதிலும் முன்னிலையில் இருப்பார்கள். கலைஞர்கள் கைவசம் உள்ள வாய்ப்புகளில் கவனம் செலுத்துவதே போதுமானது. வியாபாரிகள் கணிசமான லாபத்தைப் பெற்று திருப்தி கொள்வார்கள்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு மிகுந்த தொல்லைகளை தரக்கூடிய நாளாக அமையலாம். இருப்பினும் அவை பெரிய அளவில் உங்களைப் பாதிக்காது என்பது சிறிய ஆறுதல். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, இடமாற்றமோ, பதவி உயர்வோ கிடைப்பதில் தடங்கல் வரலாம். ஆனால் அதற்குச் சமமான வேறு பல நன்மைகளும், சலுகைகளும் கிடைக்கும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு, தொழில் முன்னேற்றத்துக்கு வழிகாட்டும். மாணவர்களுக்கு சோர்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். வியாபாரிகள், நிறையப் பொருட்களை வாங்கி இருப்பு வைக்காதீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் எதையும் இப்போது எதிர்பார்ப்பதில்லை.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோக பலன்கள் நடைபெறக்கூடிய அமைப்பு உள்ளது. அநேக நன்மைகள் தேடி வரும். என்றாலும் சிறு தடங்கல்களும் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், எதிர்பார்த்து காத்திருந்த பதவி உயர்வு, இடமாற்றம் ஆகியவற்றுக்கான உத்தரவுகளைப் பெற்று மகிழ்வர். சொந்தத் தொழில் செய்பவர்கள் ஓரளவு முன்னேற்றத்தைக் காண முடியும். மாணவர்கள் படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் வாய்ப்பு உண்டு. வியாபாரிகளில் எல்லாத் தரப்பினரும், ஓரளவு ஆதாயம் பெறக்கூடிய நிலையில் இருப்பர். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அவ்வப்பொழுது சுமுகமாகத் தீர்க்கப்பட்டு விடும் என்பதால், மனக்குறை ஏற்பட வாய்ப்பில்லை.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகளும் தீமைகளும் கலந்த பலனாகவே நடைபெறும். பணப்புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படும்போது, நண்பர்களின் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். அதைக்கொண்டு நிலைமையை சமாளித்து விடுவீர்கள். உடல்நலக் குறை, கடன் தொல்லை ஆகிய பாதிப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் ஆதரவான போக்கைக் காணவே சிரமப்படக் கூடிய நிலை உண்டாகலாம். எனவே இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றை பற்றி இப்போது சிந்திக்கக்கூட முடியாது. சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். புதியதாக தொழில் செய்ய விரும்புபவர்கள், கூட்டாளிகள் இல்லாமல் தனிப்பட்ட முறையில் செய்வது பலன் தரும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு ஏற்படும் எந்தப் பிரச்சினையிலும் பொறுமையாகவும், நிதானமாகவும் நடந்து கொள்ளுங்கள். கொடுக்கல் – வாங்கலில், சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவது என்பது மிகவும் கடினமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள், அலுவலகப் பணிகள் தொடர்பாக எவ்வித நன்மைகளையும் எதிர்பார்க்க இயலாது. பணிகளில் கவனமாக இல்லாவிட்டால், உயர் அதிகாரிகளின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். சொந்தத் தொழில் செய்பவர்கள், எவ்வளவு வேலை செய்தும் எதிர்பார்த்த வருவாய் கிடைக்கவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கலைஞர்கள் புதிய வாய்ப்புகள் கிடைக்காமல் உற்சாகம் இழந்து காணப்படுவார்கள்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு நன்மையும், தொல்லையும் கலந்தே காணப்படும். தொல்லைகளை சமாளிக்கும் மனப்பக்குவம் உங்களுக்கு ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகளைப் பெறுவதில் தடங்கல் உண்டாகலாம். ஆனால் அதற்கு இணையான சலுகைகளைப் பெற்று மகிழ்வீர்கள். தொழிற்பிரிவினர் முன்னேற்றமான நிலையைக் காண்பார்கள். கூட்டாளிகளுடன் கருத்து வேற்றுமை ஏற்பட வாய்ப்புண்டு. வியாபாரிகளுக்கு மந்த நிலையில் வியாபாரம் நடக்கும். மாணவர்கள் கல்வியில் தீவிர நாட்டம் செலுத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெறுவார்கள். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் அமைவது சிரமம். அதே நேரம் தற்போதைய வருவாயில் எவ்விதக் குறைவும் ஏற்படாது.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எந்த முயற்சியிலும் துணிந்து ஈடுபடலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இடமாற்றம், பதவி உயர்வு போன்ற நன்மைகள் கிடைக்கும். ஜனன ஜாதகம் வலுவாக உள்ளவர்கள் சிலருக்கு, வருமானங்கள் பெருகும். கலைஞர்கள் செழிப்பான சூழ்நிலையைக் காண்பார்கள். மாணவர்களுக்கு சற்றும் அனுகூலம் இல்லாத நாள் இது. படிப்பில் நாட்டம் சிறிதுமின்றி சோர்வடைந்து காணப்படுவார்கள். வியாபாரிகளுக்கு ஓரளவு பரபரப்பாக வியாபாரம் நடைபெற்றாலும், லாபம் என்னவோ குறைவாகத்தான் கிடைக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்களுடைய துறையில் முன்னேற்றம் காண்பார்கள். இரவு-பகல் பாராது உழைத்து, வாடிக்கையாளருக்கு பணியை முடித்துக் கொடுப்பீர்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகுந்த நன்மை தரக்கூடியதாக அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உயர் அதிகாரிகளின் அன்பையும் ஆதரவையும் எளிதில் பெறுவீர்கள். நீங்கள் விரும்பிய இடமாற்றம், பதவி உயர்வு போன்றவை இப்போது கிடைக்க வழி உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள், உழைப்பிற்கேற்ற வருவாய் கிடைத்து மகிழ்வார்கள். வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்தும் வகையில் ஓய்வின்றி உழைப்பீர்கள். கூட்டாளிகளை மதித்து நடந்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் அவர்களால் பிரச்சினையை சந்திக்க நேரிடும். மாணவர்கள், கெட்டிக்காரர்கள் என்று பெயர் வாங்கும் அளவுக்கு படிப்பில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். கலைஞர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் தேடி வரும். ஒரு சிலர் தங்கள் திறமைக்கான பரிசுகளும், பாராட்டுகளும் பெறுவீர்கள்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொல்லை தந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், இடமாற்றம், பதவி உயர்வு போன்றவற்றுக்காக அலைவதை விட்டுவிட்டு, உங்கள் அன்றாட பணிகளைக் குறையின்றி செய்யுங்கள். அதன் மூலம் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெற்றால், விருப்பங்கள் அனைத்தும் தானாகவே நடைபெறும். சொந்தத் தொழில் செய்பவர்கள், அதிக வேலைப்பளுவால் அவதிப்பட நேரிடும். இருப்பினும் உங்கள் உழைப்பிற்கேற்ற வருவாய் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். கலைஞர்களுக்கு வாய்ப்புகள் குறைவதுடன், வருவாயும் குறைந்து மனச்சோர்வை ஏற்படுத்தும். மாணவர்கள் உற்சாகம் குன்றிக் காணப்படுவார்கள். அதோடு தேவையற்ற சில வம்புகளிலும் மாட்டிக்கொள்ள நேரிடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.