இன்றைய ராசி பலன் – 24-4-2020

rasi palan - 24-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் பேச்சிலும் செயலிலும் நிதானத்தை கடைபிடியுங்கள். குழந்தைகளைப் பற்றிய அல்லது அவர்களுடைய எதிர்காலத்தை பற்றிய கவலைகள் மனதை ஆட்கொள்ளும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டு.கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் போன்ற சுபகாரிய செயல்கள் சற்று காலதாமதமாக வாய்ப்புண்டு என்பதால் நிதானத்தை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் சற்று கடின முயற்சி தேவைப்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். தொழில் மற்றும் உத்தியோகம் சம்பந்தமான நீங்கள் எடுத்து முயற்சிகளும் வெற்றி அடைய வாய்ப்புகள் உள்ளது. தாய் நாடுகளில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வழக்கு சம்பந்தப்பட்ட விஷயங்களில் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து தொடர்பான பிரச்சினைகளில் இருந்து வருபவர்கள் முன்னேற்றத்தைக் காண்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும். எதிர்பார்த்த பண உதவி வந்து சேர வாய்ப்புகள் உள்ளது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன்களை கொடுக்கும் நாளாகும். குழந்தைகளால் உணர்ச்சிவசப்படக்கூடிய ஒரு சில நிகழ்ச்சிகள் ஏற்படலாம். கணவன் மனைவி ஒற்றுமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அவை எல்லாம் உங்களுடைய கட்டுப்பாட்டிலேயே இருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் மனநிம்மதி பெறுவார்கள். புதிய வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.நண்பர்கள் மற்றும் உறவினர்களால் அனுகூலமும் ஆதாயமும் உண்டாகும் வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டாகும்.வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் வந்துசேரும்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு சிறிய அளவில் பற்றாக்குறை இருந்தாலும் அவைகளின் வெற்றி பெறுவீர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் செலவுகள் அலைச்சல்கள் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஆகும்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சற்று காலதாமதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உங்கள் திருமணம் தொடர்பாக குடும்பத்தில் உள்ள மூத்த ஒருவருடன் பேசுவதற்கு இன்று உகந்த நாள். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலருக்கு கடன்பட்டு சொத்துக்கள் வாங்க வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொத்து வாங்குவது அதற்காக கடன் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். மாணவர்களின் கல்வி நன்றாக இருந்து வரும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். உயர்கல்வியில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு இடமாற்றம் தொடர்பான சிந்தனைகள் ஏற்படும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மன மகிழ்ச்சியையும் சந்தோஷத்தையும் கொடுக்கக் கூடிய நாளாகும். குடும்பத்தில் அமைதி நன்றாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகள் நன்மையில் முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். வேலையில் இடமாற்றத்தை எதிர்நோக்கி இருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்ற நிலையை காண்பார்கள். மாணவர்களின் கல்விநிலை நன்றாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிக சிறந்த நாளாகும்.நீங்கள் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வெற்றி அடையும். சகோதர சகோதரிகளிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் இருந்தால் வெற்றி கிடைக்கும்.சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு முன்னேற்றமும் உண்டாகும். பல புதிய தொழில் வாய்ப்புகள் உங்கள் கண்முன் வந்து நிற்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். குடும்பத்தில் அமைதி தவழும். உத்தியோகம் தேடி கொண்டிருப்பவர்கள் நல்ல தகவல்கள் கிடைக்க கூடும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருந்து வரும். குடும்பத்திலுள்ளவர்களிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை மேம்படும். உயர் கல்வியை நோக்கி சென்று கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். நண்பர்களிடம் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கக்கூடும்.புதிய தொழில் முயற்சிகள் வெற்றி அடைவீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையக்கூடும். தொழில் முயற்சிகள் வெற்றி அடைவதாக இருக்கும். திடீர் பணவரவு உண்டாக வாய்ப்புகள் உள்ளது. சொத்துக்கள் வாங்குவது அதற்கான கடன் வாங்குவது போன்ற சிந்தனைகளிலும் செயல்பாடுகளிலும் இருப்பவர்கள் வெற்றி அடைய வாய்ப்புகள் உள்ளது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக அமையும். எதிர்பார்த்த பணவரவு உண்டாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஆராய்ச்சி துறை மாணவர்களுக்கும் மருத்துவத் துறை மாணவர்களுக்கும் சற்று கடினமான நாளாக அமையும். ஆனால் இன்றைய நாள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் சற்று கருத்து வேறுபாடுகள் ஏற்பாட்டு நீங்குவதற்கு வாய்ப்புண்டு.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -