இன்றைய ராசி பலன் – 24-05-2021

rasi palan - 24-5-21

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் சுமாரான லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும். எடுக்கும் முடிவுகளில் தெளிவு இருக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் விஷயங்கள் நல்லபடியாக நிறைவேறும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் உங்கள் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். எதிலும் வெற்றி பெற வேலனை வணங்குங்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முடக்கம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை குறையும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த சில விஷயங்களில் இடையூறுகள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உங்களுடைய நட்பு வட்டம் விரிவடைவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன்-மனைவி பிரச்சினை தீரும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி வாகை சூடுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மன அமைதி பெற தியானம் மேற்கொள்வது நல்லது.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். சகோதர சகோதரிகளுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை கொடுத்து வரும் போட்டியாளர்களின் தொல்லைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அமைதியை கடைபிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். வீண் செலவுகள் ஏற்படும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்த விஷயங்கள் நினைத்தபடி நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். தொழிலாளர்களின் ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்க வேலையில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிப்பீர்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் குழப்பமான மனநிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஒரு முறைக்கு இரு முறை ஆலோசனை செய்து விட்ட முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். தொலை தூர இடங்களிலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல விஷயங்கள் நடக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் உடன் இருப்பவர்களே உங்களை புரிந்து கொள்ளாமல் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் மன உளைச்சல் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவே வெறுப்பை உண்டாக்கும். குடும்பத்தில் அமைதி இருக்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கேட்டது கிடைக்கக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் தனலாபம் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சில சிக்கல்கள் தீர்வதற்கு வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியம் சிறக்க கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைந்து திரிந்து ஒரு விஷயத்தை பெற வேண்டி இருக்கும். உடன் இருப்பவர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். குடும்பத்தில் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை உயரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த விஷயங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில வேண்டா வெறுப்புகள் ஏற்படலாம். எதிலும் நிதானம் தேவை.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொது விஷயங்களில் ஈடுபாடு அதிகம் இருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ஏற்ற காலம் இது அல்ல. புதிய முதலீடுகளையும் தவிர்க்கவும். ஆரோக்கியத்தில் கூடுதல் எச்சரிக்கை தேவை.