இன்றைய ராசி பலன் – 25-04-2018

12-rasi

மேஷம்:

Mesham Rasi
மனம் உற்சாகமாகக் காணப்படும்.இ ன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வெளிநாட்டில் இருந்து சுபச் செய்திகள் வரும்.

ரிஷபம்:

Rishabam Rasi
முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். உறவினர் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

மிதுனம்:

midhunam
உற்சாகமான நாள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

உங்கள் ராசிக்கான சித்திரை மாத பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

கடகம்:

Kadagam Rasi
எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். வாழ்க்கைத்துணை வழியில் பண உதவி கிட்டும். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

சிம்மம்:

simmam
புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். அதிகாரிகள் சந்திப்பும் அவர்களால் காரிய அனுகூலமும் உண்டாகும். சிலருக்கு பிற்பகலுக்கு மேல் தலைவலி வரக்கூடும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

கன்னி:

Kanni Rasi
உற்சாகமான நாள். எதிர்பாராத பண வரவுக்கும் இடமுண்டு. புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

துலாம்:

Thulam Rasi
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பிற்பகலுக்கு மேல் எதிர்பாராத வகையில் காரியத் தடை ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பயணத்தால் நன்மை உண்டாகும்.

விருச்சிகம்:

virichigam
அலுவலகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். சுறுசுறுப்பாக அனைத்து வேலைகளையும் முடித்து மேலதிகாரியின் பாராட்டுகளை பெறுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று சிற்சில தடைகள் ஏற்பட்டாலும் சாமர்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகளில் வெற்றி ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasi
வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். வெளியூர்களில் இருந்து எதிர்பார்த்த தகவல்கள் வரும். சகோதர வகையில் அனுகூலம் ஏற்படும். அதிகாரிகளின் சந்திப்பும் காரிய அனுகூலமும் உண்டாகும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மகரம்:

Magaram rasi
மனம் உற்சாகமாகக் காணப்படும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

கும்பம்:

Kumbam Rasi
இன்று நீங்கள் புதிய முடிவுகள் எதுவும் எடுக்காமல் வழக்கமான வேலைகளில் மட்டுமே கூடுதல் கவனம் செலுத்தவும். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரித்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்புடன் எளிதாக முடிப்பீர்கள். அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

மீனம்:

Meenam Rasi
மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பிற்பகலுக்குமேல் வீண் செலவுகள் உண்டாகும். சிலருக்கு எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணை வழியில் உதவிகள் கிடைக்கும்.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.