Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (25/08/2019): கொடுத்த கடன் திரும்ப வரும்

Rasi Palan
- Advertisement -

மேஷம்:

எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. காரியங்களில் அனுகூலம் உண்டாகும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

ரிஷபம்:
Rishabam Rasi

அரசு அதிகாரகளின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். வெளிநாட்டில் இருந்து வரும் செய்தி மகிழ்ச்சி தரும். மனம் உற்சாகமாகக் காணப்படும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மிதுனம்:
midhunam

பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். மற்றவர்களுடன் வீண்மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமை அவசியம். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும்.

- Advertisement -

கடகம்:
Kadagam Rasi

எதிலும் பொறுமையுடன் யோசித்துச் செயல்படவேண்டிய நாள். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். தாய் வழி உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் உண்டாகும்.

சிம்மம்:
simmam

பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளைத் தொடங்கலாம். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

- Advertisement -

கன்னி:
Kanni Rasi

கன்னி ராசிக்கு இன்றைய ராசி பலன் படி நண்பர்களிடமிருந்து கேட்ட உதவிகள் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும் சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆலயங்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு உண்டாகும்.

துலாம்:
Thulam Rasi

ஒரு சிலருக்கு புதியவர்களின் அறிமுகமும் அதனால் நன்மையும் உண்டாகும். தேவையான பணம் கைக்குக் கிடைக்கும். எதிர்பார்க்கும் பணம் கைக்கு வரும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்:
virichigam

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வருகையால் வீட்டில் குதூகலம் பிறக்கும். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். பிற்பகலுக்கு மேல் சில எதிர்பாராத பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவி இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மைகள் ஏற்படும்.

தனுசு:
Dhanusu Rasi

புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும்.

மகரம்:
Magaram rasi

அதிகாரிகளிடம் எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்குச் சாதகமாக முடியும். கொடுத்த கடன் திரும்ப வரும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் உங்கள் திறமை வெளிப்படும். அலுவலகத்தில் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் நன்மை உண்டாகும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசாங்க காரியங்கள் சாதகமாக முடியும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

மீனம்:
meenam

புதிய நண்பர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். வீண் அலைச்சல் உண்டாகும். வியாபாரத்தில் சிறு பிரச்னைகள் ஏற்படக்கூடும். நினைத்த காரியங்கள் அனுகூலமாக முடியும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -