இன்றைய ராசி பலன் – 25-1-2021

rasi palan - 25-1-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு போன்றவை சாதக பலன்களை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலைப்பளு காரணமாக உடல் சோர்வு ஏற்படும். வீட்டில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை சீராக இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பதில் சிக்கல்கள் நீடிக்கும். சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பயணங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். மற்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் துணை ஆதரவாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் தேவைப்படும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் உண்டாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயங்கள் சாதக பலன்களை கொடுக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கப் பெறும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு சிறப்பாக அமையும். பொருளாதாரத்தில் இருக்கும் ஏற்ற இறக்கங்களை எளிதாக திறம்பட சமாளித்து விடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் அனுசரணையான குணங்களால் நிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதை எடுத்தாலும் உங்களுக்கு வெற்றி தான் அதில் உண்டாகும். புதிய சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடி யோகம் தரும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த ஒற்றுமை மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பொறுப்புகள் பணிச் சுமையை ஏற்படுத்தும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் உண்டாகும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்ததை விட லாபம் பன்மடங்கு பெறக்கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொல்லை டென்ஷனை ஏற்படுத்தும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாட்களின் ஆதரவு திருப்தி அளிக்கும் வகையில் இருக்கும். ஆரோக்கியத்தில் எதிர்பார்த்த அளவிற்கு முன்னேற்றம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் மூலம் தன்னம்பிக்கை மற்றும் புது உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பண விஷயங்களில் எச்சரிக்கை தேவை. அதிக தொகையை ஈடுபடுத்தும் பொழுது சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு குறையும். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் மறுக்கப்படும். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்களில் சாதகப் பலன்கள் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் மூலம் அதிக லாபம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை மேலோங்கும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகள் உண்டு. வேலையில்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை வீடு தேடி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மகிழ்ச்சியினை உண்டாக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் நீங்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீட்டில் இருக்கும் தீராத பிரச்சினை எல்லாம் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தொலைத்த பொருள் ஒன்று கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்றம் தரும் வகையில் இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகள் வழியே அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளும் டென்ஷன் அதிகரிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலவீனம் அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கையும் தைரியமும் மேலோங்கும். நண்பர்களின் ஆதரவு மனதிற்கு உற்சாகம் அளிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பண ரீதியான விஷயங்களில் லாபம் உண்டாகும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு சாதகப் பலன்கள் உண்டாகும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -