இன்றைய ராசி பலன் – 25-12-2019

rasi palan - 25-12-2019
- Advertisement -

மேஷம்:
இன்றைய தினம் உங்களுக்கு அதிகப்படியான பணிச்சுமை காரணமாக சோர்வு உண்டாகலாம். உடல்நலனில் அக்கறை தேவை. அனாவசிய செலவுகளால் மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். சிக்கனத்தின் அருமையை புரிந்து கொள்வீர்கள். உங்களுக்கு ஓய்வு தேவை. தம்பதியரிடையே வாக்குவாதம் ஏற்பட்டால் நீங்கள் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களில் உணவு கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் அதற்குரிய பலன் என்னவென்று இன்றைய தினம் உணர்ந்து கொள்வார்கள். உங்களின் தன்னம்பிக்கை உங்களது பலம். எதையும் நேர்மையாக சிந்தித்து செயல்பட்டால் நல்லது நடக்கும். கணவன்-மனைவி உறவில் விரிசல் ஏற்படாமல் இருக்க ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
உங்களின் பணிவான குணத்தால் பல நன்மைகளை அடைய காத்திருக்கிறீர்கள் என்றே கூறலாம். புதிய வாய்ப்புகள் வீடு தேடி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. வருகின்ற வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்வது நல்லது. உங்களுடைய விடாமுயற்சிக்குரிய பலனை விரைவில் காணலாம்.

கடகம்:
இன்றைய தினம் ஆரோக்கியத்தில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் ஏற்படலாம். சக பணியாளர்களிடம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. உங்களின் வேலை பளு காரணமாக ஏற்படும் கடுகடுப்பை உங்கள் துணையின் மீது செலுத்தாமல் இருப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
இன்றைய தினம் உங்களின் பொறுப்புகளை உணர்ந்து செயல்படும் நாளாக அமையும். எதையும் மேலோட்டமாக பார்ப்பது நல்லது. இன்றைய தினம் முக்கிய முடிவுகளை எடுக்காமல் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நீடித்திருக்க விநாயகரை வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

- Advertisement -

கன்னி:
இன்று உங்களுக்கு பல நன்மைகள் நடக்கும் நல்ல நாளாக அமையும். உங்களுடைய வேலையை சரியாக செய்து முடிப்பீர்கள். நீங்கள் யாரை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைத்தீர்களோ அவர்கள் உங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்வார்கள். திடீர் பிரயாணம் நன்மையில் முடியும் வாய்ப்புகள் இருக்கிறது. பயனுள்ள பல நல்ல காரியங்களில் ஈடுபடுவீர்கள்.

துலாம்:
துலாம் ராசிக்காரர்கள் இன்றைய தினம் வேலை பளு காரணமாக அதிக சோர்வுடன் காணப்படுவீர்கள். ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. எந்த பிரச்சனைக்கும் பொறுமையுடன் இருப்பது நல்லது என்பதை உணர்ந்து கொள்வீர்கள். சரியான திட்டமிடலுடன் நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் வெற்றிகரமாக அமையும். தெய்வ வழிபாடு நன்மையை உண்டாக்கும்.

விருச்சிகம்:
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பாராத நல்ல செய்திகள் இல்லம் தேடி வந்து சேரும். கணவன் மனைவிக்குள் சிறு பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் இருக்கிறது. வரவுக்கு மீறி செலவுகள் வந்து சேரலாம்.

தனுசு:
இன்றைய தினம் இறை வழிபாடுகளில் கவனத்தை செலுத்துவீர்கள். அதனால் மனம் அமைதியாகவும் சாந்தமாகவும் காணப்படும். இன்றைய நாளில் எடுக்கப்படும் முடிவுகள் அனைத்தும் வெற்றிகரமாக நிறைவேறும். தம்பதியர் இடையே பரஸ்பர அன்பு நிலைத்திருக்கும். அம்பிகை வழிபாடு நல்ல நாளாக அமைத்துக் கொள்ள உறுதுணையாக இருக்கும்.

மகரம்:
இன்றைய தினம் உங்களுக்கு புதிய முயற்சிகள் எடுப்பதற்கான நல்ல நாளாக இருக்கும். உங்களின் திறமையை பலர் பாராட்டும் இனிய நாளாக அமையும். சிறப்பான செய்திகள் விரைவில் வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. பெற்றோர்களின் உடல் நலனில் அக்கறை தேவை. கணவன் மனைவியிடையே சண்டை சச்சரவுகள் ஏற்படலாம். எச்சரிக்கையாய் இருப்பது நல்லது.

கும்பம்:
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் குழப்பமான நாளாக அமையும். எந்த முடிவையும் இந்த நாளில் எடுக்காமல் இருப்பது நல்லது. தனவரவு திருப்திகரமாக இருக்கும். வரவேண்டிய பாக்கிகள் வந்துசேரும். நீங்கள் மனதில் நினைத்த காரியம் சரியானதா? தவறானதா? என்ற குழப்பத்தில் இருப்பீர்கள். உங்களின் இலக்குகள் சரியானதாகவே இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுங்கள்.

மீனம்:
இன்றைய தினம் உங்களுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்தும் நாளாக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்காது. பணி நிமித்தமாக வெளியிடங்களுக்கு செல்லும் போது கவனமுடனிருப்பது நல்லது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பிள்ளைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு செயலாற்றுவது நல்லது. ஆன்மீக ஈடுபாடு நல்ல பலன்களை நல்கும்.

- Advertisement -