இன்றைய ராசி பலன் – 25-2-2020

rasi palan - 25-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் உங்களிடம் மேலோங்கி காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு கட்டுக்குள் வந்துவிடும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். உங்களின் கருத்துக்களுக்கு தங்களின் குடும்பத்தார் மதிப்பளிப்பார்கள்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒளிமயமான நாளாக இருக்கும். இதுவரை இருந்து வந்த பிரச்சினைகள் படிப்படியாக நீங்கும். நீங்கள் எதிர்பார்க்கும் ஒரு சில விஷயங்கள் தடையின்றி நடைபெறும். திருமண பேச்சு வார்த்தைகள் வெற்றி தரும். கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமாக அமைந்துவிடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் விருத்தி உண்டாகும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. புதிய தொழில் முயற்சிகள் லாபகரமாக அமையும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவனச்சிதறல் உண்டாகலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முயற்சிகளை மேற்கொள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். புதிய நண்பர்களின் ஒத்துழைப்பால் நல்ல பல விஷயங்களை கற்றுத் தேர்வீர்கள். வழக்குகள் போன்றவற்றை கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அலட்சியமாக இருந்து விடாமல் பார்த்துக்கொள்ளுங்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். எதையும் நேர்மறையாக சிந்திக்கும் உங்களுக்கு இன்றைய நாள் வெற்றிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, பணியிட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான சூழ்நிலை அமையும். எதிர்பாராத விஷயங்கள் நன்மைகள் தரும். மாணவர்களின் கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். புதிய சிந்தனைகள் வளரும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற சூழ்நிலை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் விருத்தி உண்டாகி செழிப்புடன் காணப்படுவீர்கள். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். எனினும் கவலை கொள்ள தேவை இல்லை. சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஜாமீன் கையெழுத்து போடுவதில் கவனம் தேவை.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோர்வுடன் காணப்படும் நாளாக இருக்கும். பெண்களுக்கு வேலைபளு காரணமாக அதிக சோர்வுடன் காணப்படுவீர்கள். தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி கிட்டும். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்களுக்கு லாபகரமாக இருக்கும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருப்பினும் ஆர்வத்துடன் பணியாற்றும் ஒரு நாளாக இருக்கும். நண்பர்களின் ஆதரவு கிட்டும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டு மறையும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். உங்களின் விடாமுயற்சிக்கு உரிய பலன் கிட்டும். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவும். பெண்களுக்கு இறைவழிபாடுகள் மூலம் மன அமைதி உண்டாகும். கணவன் மனைவி பிரச்சனைகள் கட்டுக்குள் இருக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் மரியாதை கூடும். உங்களின் நாணயமான குணத்திற்கு தகுந்த பலன் கிட்டும். இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் கூட உங்களை புரிந்து கொள்வதில் ஆர்வம் செலுத்துவார்கள். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. விளையாட்டுத் துறை சார்ந்த பயிற்சிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சற்று சோர்வுடன் காணப்படுவார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவு உண்டு. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் உடனான நட்பு மேலோங்கி காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் புதிய எதிரிகள் தோன்றலாம். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் கல்வியில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் செலுத்துவீர்கள். நண்பர்களின் ஒத்துழைப்பால் நன்மைகள் உண்டாகும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். பெண்களுக்கு மற்றும் குடும்பத்திலுள்ள மூத்தவர்களுக்கு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடனான பிரச்சனைகள் தீர்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி மனப்பான்மை ஏற்படும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஹனுமன் வழிபாடு இன்றைய நாளை மகிழ்ச்சிகரமாக மாற்றித் தரும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். பயணங்கள் மேற்கொள்வோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். மாணவர்களின் கல்வி நிலையில் சீராக இருக்கும். ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். உயர் கல்வி பயில்பவர்கள் சாதனைகளைப் புரிவீர்கள். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். பைரவருக்கு விளக்கு ஏற்றி வழிபடுவதன் மூலம் மன அமைதி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.