இன்றைய ராசி பலன் – 25-3-2021

rasi palan - 25-3-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கக் கூடிய நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும் எனினும் கூடுதல் பொறுப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மனஅமைதி கிடைக்க செய்ய தியானங்கள் மேற்கொள்வது நல்லது.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் சற்று பொறுப்புடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்கள் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்துவிடக் கூடாது. சுய தொழிலில் இருந்துவந்த மந்தநிலை மாறி சிறப்பான முன்னேற்றம் அடையும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பணவரவு உண்டாகி மன மகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில் மற்றும் வியாபாரத்தில் தன லாபம் பெற புதிய உத்திகளை கையாள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருப்பதற்கு கொடுத்து செல்வது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீரென பழைய உறவுகளை சந்திப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தனலாபம் பெருகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கப் பெறும் யோகமுண்டு.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிடங்களுக்கு செல்வதன் மூலம் அனுகூலமான பலன்களை பெறலாம். சுய தொழில் புரிபவர்களுக்கு தங்களுக்குக் கீழ் பணிபுரியும் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் சிறப்பான முன்னேற்றத்தைக் காணலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டு பெறுவதற்கு போராட்டம் இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களை சுற்றியுள்ளவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் பாக்கியம் உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொட்டதெல்லாம் பொன்னாக கூடிய வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்ட திருமண சுப காரிய முயற்சிகளில் வெற்றி கைகூடி வரும் யோகமுண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு கைமேல் பலன் கிடைக்க புதிய நடைமுறைகளை செயல்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி உண்டாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கக் கூடிய யோகம் உண்டு. தொழில் புரிபவர்கள் செய்யும் தொழிலே தெய்வம் என்று விடாமுயற்சியை செலுத்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சமூகத்தின் மீது அக்கறை மேலோங்கி காணப்படும். குடும்பத்தில் அமைதி நிலவ அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று என்று இருக்கும். எனவே கூடுமானவரை கவனமுடன் செயலாற்றுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும். சுற்றியிருக்கும் பகைவர்களின் தொல்லை விரக்தியை உண்டு பண்ணும். ஆரோக்கியம் சீராக இருக்கும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் நினைத்ததை விட சிறப்பான நாளாக அமைய இருக்கிறது. குடும்பத்தில் இருக்கும் பொருளாதார பற்றாக்குறையை சமாளிக்க திறம்பட போராடுவீர்கள். மனதிற்குப் பிடித்த வேலை அமைய ஒரு சிலருக்கு பாக்கியம் உண்டாகும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகம் மற்றும் தொழில் ரீதியான பயணங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் அமையும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு சிலருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். சுயதொழிலில் எதிர்பார்க்கும் லாபம் கிடைப்பது இடையூறு ஏற்படும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 25-3-2021.

- Advertisement -