இன்றைய ராசி பலன் – 25-4-2020

rasi palan - 25-4-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கோவிலுக்கு செல்வது அல்லது வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு தாய்நாட்டில் இருந்து நல்ல தகவல்கள் கிடைப்பது போன்றவை உண்டாகும். குடும்பத்தில் அமைதி தழுவும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். வெளிநாட்டில் படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு கல்வி திறம்பட அமையும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாள் ஆகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல மாற்றங்கள் உண்டாகும் வெளிநாடுகளில் வசித்து கொண்டிருப்பவர்களுக்கு சிறிய அளவிலான இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு கணவன் மனைவி பிரிந்து இருப்பவர்கள் ஒன்று சேர வாய்ப்புகள் உண்டாகும். நீங்கள் எதிர்பார்க்கும் பல காரியங்கள் வெற்றி அடையும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மைகள் தரும் நாளாகும் சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது போன்றவற்றில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும்.படிப்பை முடித்து வேலையை எதிர்நோக்கி உள்ளவர்களுக்கு வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். வெளிநாடுகளில் கல்வி பயின்று கொண்டிருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை இருக்கும். வாகன வகையில் ஆதாயம் உண்டாகும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் வெற்றியில் முடியும். கல்வியில் மாணவர்கள் நல்ல முன்னேற்றத்தை அடைவார்கள். பல காலமாக வெளிநாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்கள் தாய் நாட்டை நோக்கி திரும்ப வாய்ப்பு உள்ளது. இருப்பவர்கள் சொந்த தொழில் ஆரம்பிப்பதற்கு திட்டமிடுவார்கள். உடன்பிறந்தவர்களுடன் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கடன் பிரச்சினை கட்டுக்குள் இருக்கும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்துடன் அதிக நேரம் செலவு செய்ய முடியாமல் தவிப்பீர்கள். படிப்பை முடித்து வேலைவாய்ப்பை வைத்து இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி கல்வி படித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றமான சூழ்நிலை அடைவார்கள். கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் பல புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச் சிறந்த நாளாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன்னேற்றமான நாளாகும். வாகன வகையில் ஆதாயம் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நன்மை உண்டாகும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலை காண்பார்கள்.திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் நன்மையில் முடியும். உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். கோவிலுக்குச் செல்லுதல் மூத்தவர்கள் ஆசீர்வாதம் பெறுதல் போன்றவை நன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு உத்தியோக உயர்வுகள் போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மிகச்சிறந்த பொருளாதார முன்னேற்றத்தை பெறுவீர்கள். பொருளாதார பற்றாக்குறை இருந்தாலும் திறம்பட செயல்பட்டு வெற்றி அடைவீர்கள். ஒரு சிலருக்கு இடமாற்றம் அல்லது வெளிநாடு வேலை வாய்ப்பு போன்றவை கிடைக்கும். கல்வியை முடித்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாகும். நீங்கள் எதிர்பார்க்கும் பல காரியங்கள் வெற்றியடையும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடைய வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடன்பிறந்தவர்களுடன் ஒற்றுமை நன்றாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாகும். கடன் பிரச்சினைகள் மனதை அலைக்கழித்தாலும் அனைத்தும் கட்டுக்குள் நிற்கும். மாணவர்களின் கல்வி சிறப்பாக இருக்கும். படிப்பு முடிந்து வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு அமைய வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு இனிமையான நாள் ஆகும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். திருமண முயற்சிகள் வெற்றியடையும். சொத்துக்கள் வாங்குவது விற்பது போன்ற முயற்சிகளில் ஆதாயம் அடைவீர்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சொந்தத் தொழில் செய்பவர்களுக்கு இருந்து வந்த பணம் பற்றாக்குறை நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் நன்மையில் முடியும். குடும்பத்திலுள்ளவர்களிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உண்டு. ஒரு சிலருக்கு ஆடை ஆபரணம் அணிகலம் சேர்க்கைக்கு வழி இருக்கிறது.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நன்மை தரும் நாளாகும். பொருளாதாரத்தில் முன்னேற்றத்தை அடைவீர்கள். கடன் பிரச்சினைகள் ஒரு தீர்வுக்கு வருவதற்கு வாய்ப்பு உள்ளது. குடும்பத்திலுள்ளவர்களிடம் ஒற்றுமை நன்றாக இருக்கும். சொந்தத் தொழில் செய்பவர்கள் முன்னேற்றமான சூழ்நிலையை காண்பார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயமும் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் விரும்பிய இடமாற்றம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -