இன்றைய ராசி பலன் – 26-1-2021

Rasi Palan

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்கள் இன்று சிந்தித்து செயல்பட வேண்டிய நாளாக இருக்கப் போகின்றது. அவசரப்பட்டு எந்த ஒரு முடிவையும் எடுக்க வேண்டாம். வீட்டில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் கணவன் மனைவி யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மை தரும். கோபத்தைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் நாளாக அமைய போகின்றது. அதிர்ஷ்டம் எந்த ரூபத்திலாவது கதவை தட்டும். சரியான முறையில் அதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தொழில் வியாபாரம் நல்ல முன்னேற்றத்தை அடையும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த நாள் தடைகளை தகர்க்கும் நாளாக இருக்கப்போகின்றது. புதிய முயற்சிகள் நிச்சயம் வெற்றியடையும். சுறுசுறுப்பாக செயல்பட்டு வாழ்க்கையில் ஒரு படி முன்னேற்றத்தை அடைய இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும்.

கடகம்
Kadagam Rasi
கடகராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவாகக் கூடிய நாளாகத்தான் இருக்க போகின்றது. சுப செலவுகளாக தான் இருக்கும். வீட்டில் உறவினர்களின் வருகை இருக்கும். வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்கள் இன்று உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தவரை வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருப்பது நல்லது. அலுவலக வேலைக்கு செல்பவர்கள், மாஸ்க் அணிந்து கொண்டு செல்ல வேண்டும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் இருக்க போகின்றது. உங்கள் சோம்பேறித்தனத்தை மட்டும் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, சுறுசுறுப்பாக செயல்பட்டால் நல்ல பெயரை வாங்கி விடுவீர்கள். மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லவேண்டும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக அமையப்போகின்றது. உங்கள் வாழ்க்கைத் துணைக்கு பரிசுப்பொருளை வாங்கிக் கொடுத்து மகிழ்விக்க போகிறீர்கள். வாராக் கடன் வசூலாகும். குடும்பத்துடன் வெளி இடங்களுக்கு சுற்றுலா செல்வதற்கு கூட நிறையவே வாய்ப்பு உள்ளது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் தரும் நாளாக அமையப்போகின்றது. தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய முயற்சியில் ஈடுபடலாம். வேலையில் நல்ல முன்னேற்றம் உண்டு. உங்களுடைய மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொள்ளும் நேரம் வந்துவிட்டது.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்கள் இன்று பாராட்டு மழையில் நனையப் போகிறீர்கள். அந்த அளவிற்கு உற்சாகமாக செயல்பட்டு, நாளைய வேலையையும் இன்றைக்கே முடித்து வைக்கப் போகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானமும் மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இருந்து வந்த ஏதாவது ஒரு பிரச்சனை இன்று ஒரு முடிவுக்கு வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் உற்சாகத்தோடு செயல்படப் போகிறீர்கள்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இது உற்சாகம் தரும் நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் செய்த வேலைக்கு உங்கள் மேல் அதிகாரிகள், உங்களை பாராட்டி, அதற்கு தகுந்த சன்மானம் வழங்கும் வாய்ப்பு உள்ளது. தொழிலில் நல்ல பெயரை வாங்க போகிறீர்கள். தடைப்பட்டிருந்த சுபகாரியங்கள் நடக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சுமாரான நாளாகத்தான் அமையப்போகின்றது. யாரிடமும் வம்பு சண்டைக்கு செல்ல வேண்டாம். சண்டை உங்களைத் தேடி வந்தாலும், உங்கள் வாயை மூடிக் கொண்டு இருப்பது தான் உங்களுக்கு நன்மையை தரும். மற்றபடி சொந்தத் தொழில் வியாபாரம் எப்போதும் போல் செல்லும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்