இன்றைய ராசி பலன் – 26-1-2020

rasi palan - 26-1-2020
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்குப் பிடித்த வேலை நிச்சயம் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை பலப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஊதிய உயர்வு மற்றும் இடமாற்றம் போன்றவற்றை எதிர்நோக்கலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் தடையின்றி வெற்றி பெறும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு ஏற்றகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். பொருளாதாரம் சீராக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. மூன்றாம் நபரை நம்பியிராமல் சுயமாக முடிவெடுப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். எதிர்காலத்திற்கான திட்டமிடல் இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் நல்ல வெற்றி கிட்டும். ஒரு சிலருக்கு சொந்த வீடு வாங்கும் யோகமுண்டு. குடும்பத்தில் இருப்பவர்களிடம் அமைதியான முறையில் உரையாடுவது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் சற்று எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. பொருளாதாரப் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள். சகோதர சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். தனவரவு சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய யுக்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நற்செய்திகள் கிட்டும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரம் தொடர்பாக பிரயாணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. பிள்ளைகளால் உள்ளம் மகிழும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர், வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்திருப்போர்க்கு நல்ல தகவல் வந்து சேரும். பொருளாதாரம் சீராக இருக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் காணப்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்கள் லாபகரமாக அமையும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான திட்டமிடலுடன் இருப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். கூட்டுத்தொழில் முயற்சிகள் பலன் தரும். வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதாரம் ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். பிள்ளைகளின் கல்வி விஷயத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம், உத்தியோக மாற்றம் போன்றவை ஏற்படுவதற்கான சூழ்நிலை நிலவுகின்றன. வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களை கவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். சகோதர, சகோதரிகளால் ஆதாயம் உண்டு. மனதிற்கு பிடித்தவர்களால் சில சங்கடங்கள் உருவாகி மறையும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளை மேற்கொள்பவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு புதிய கல்வி வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். பொருளாதாரத்தில் சீராக இருந்தாலும் வீண் விரயங்களால் மனக்கலக்கம் கொள்வீர்கள். மனதிற்கு பிடித்தவர்களால் சில பிரச்சனைகள் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். உடல் உபாதைகளால் அவதிப்படுவீர்கள். கோபத்தை குறைத்து பொறுமையை கையாள்வது நல்லது. வழக்குகளில் வெற்றி கிட்டும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் ஈடுபடுபவர்களுக்கு லாபகரமான நாளாக அமையும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சில காரியங்கள் இனிதே நடந்தேறும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. கணவன்-மனைவிக்கிடையே சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நற்செய்தி உண்டு. கல்வியில் மாணவர்கள் ஏற்றத்துடன் காணப்படுவார்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். வெளிநாடு செல்வதற்கு காத்திருப்போருக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. சுயதொழில் புரியும் பெண்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். கூட்டுத்தொழில் புரிபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் மன அமைதி கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைப்பளு காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவீர்கள். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். பெண்களுக்கு வாகன வகையில் ஆதாயம் உண்டு.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். அந்நாட்டிலேயே சொத்துக்கள் வாங்குவது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவார்கள். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உயர் கல்வி பயில்பவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்குப் பிடித்தவார்களால் சங்கடங்கள் உருவாகி மறையும். கூட்டுத்தொழில் புரிபவர்கள் புதிய வாய்ப்புகள் உருவாக்கிக் கொள்வதன் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. எதிர்பாராத பண வரவு திருப்திகரமாக இருக்கும்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நண்பர்களால் ஆதாயமுண்டு. மாணவர்கள் கல்வியில் ஏற்றத்துடன் காணப்படுவார்கள். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிடைக்கும். உயர் கல்வி பயில்பவர்கள் ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகக்கூடும். வழக்குகள் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவை கிட்டும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். சிறு தொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமணம் தொடர்பான விஷயங்களில் ஈடுபடுபவர்களுக்கு தாமதமானாலும் வெற்றி கிட்டும். நண்பர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். வழக்குகளில் ஈடுபடுபவர்கள் சாதகமான சூழ்நிலையை காண்பார்கள். வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு தாமதமானாலும் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும்.

மீனம்:
மீனா ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வெளிநாடு வேலை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டில் வசிப்பவர்கள் தாய் நாடு திரும்புவதற்கான முயற்சிகளில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்திலுள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கோபத்தை குறைத்து பொறுமையை கையாள்வது யோகம் தரும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவியிடையே ஒற்றுமை ஓங்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கூட்டுத் தொழில் முயற்சிகள் வெற்றி தரும். வியாபாரத்தில் சில அலைச்சல்கள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. வழக்குகளில் ஈடுபடுபவர்கள் சாதகமான சூழ்நிலையில் இருப்பார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. மாணவர்களின் கல்விநிலை ஏற்றத்துடன் காணப்படும்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

- Advertisement -