இன்றைய ராசி பலன் – 26-12-2020

rasi palan - 26-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களிடம் நேர்மறை சிந்தனைகள் அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பை பெறுவதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து செல்வதால் நன்மைகள் நடைபெறும். குடும்பத்தில் நிதானத்துடன் இருப்பது மன அமைதியைக் கொடுக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன்-மனைவிக்கிடையே தேவையில்லாத வாக்குவாதங்களில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு சாத்தியக்கூறு உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய விடா முயற்சிக்கு நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் ஏற்றத்துடன் இருப்பதால் குடும்பத் தேவைகளை எளிதாக பூர்த்தி செய்து விடுவீர்கள். பிள்ளைகளுக்கு உங்கள் மேல் அன்பு அதிகரிக்க செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் மற்றும் பதவி உயர்வுகள் போன்றவற்றில் சாதகப் பலன்கள் உண்டாகும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்திடீர் அதிர்ஷ்டங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வருகின்ற வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பலம் எது என்பதை உணர்ந்து கொள்ளும் சூழ்நிலை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்திலிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவதில் அக்கறை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை நிலுவையில் இருந்த கடன் பாக்கிகள் வசூலாகாத கூடிய வாய்ப்புகள் உண்டு.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மறைமுக எதிரிகளின் தொல்லை அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தானுண்டு தன் வேலையுண்டு என்று இருப்பது மிகவும் நல்லது. அடுத்தவர்களின் பேச்சை கேட்பதை விட, உங்களுடைய மனசாட்சியின் பேச்சை கேட்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மற்றவர்களின் கருத்துக்கு முன்னுரிமை கொடுத்து அவர்களின் அன்பை பெறுவீர்கள். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தடைப்பட்டு கொண்டு வந்திருந்த சில விஷயங்கள் வெற்றியில் முடிய கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழிலில் நல்ல லாபத்தை காணலாம்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. சுய தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப்பெறும். புதிய பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்ததெல்லாம் நிறைவேற கூடிய அற்புதமான நாளாக இருக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் நன்மைகள் நடைபெறும். பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு மகிழ்ச்சியை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் முன்னேற்றத்தை எளிதாக அடையலாம்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களின் மூலம் நன்மைகள் நடைபெறக்கூடிய அற்புதமான நாளாக இருக்கும். இதுவரை உங்களுடைய பேச்சுக்கு மதிப்பு கொடுக்காதவர்கள் மதிப்புக் கொடுங்க துவங்குவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு தங்களுடைய பலம் அறியும் நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர் வரும் சவால்களை எளிதாக சமாளிக்க கூடிய தைரியம் பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடையே இருந்த போட்டி பொறாமைகள் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய புதிய முயற்சிகளை காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பயணங்களின் பொழுது எச்சரிக்கையுடன் செயல்படுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடன் மனக்கசப்புகள் இருந்துவந்த நண்பர்களுக்கு உதவி செய்யக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் இழந்த பொருளாதாரத்தை மீட்கும் முயற்சியில் இருப்பீர்கள்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்