இன்றைய ராசி பலன் – 26-12-2019

rasi palan - 26-12-2019

மேஷம்:
Mesham Rasi
இன்றைய நாள் உங்களுக்கு ஒரு குழப்பமான மனநிலையை உருவாக்கும் நாளாக இருக்கும். நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உங்களின் நேர்மையான குணத்திற்கு தகுந்த நற்பலன்கள் வந்தடையும். சிலர் உங்களை முன்னுதாரணமாக எடுத்துக்கொள்வார்கள். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் ஏற்படலாம்.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

ரிஷபம்:
Rishabam Rasi
இன்று உங்களுடைய தனவரவு திருப்திகரமாக இருக்கும். இன்று பலரின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். குதூகலத்துடன் காணப்படுவீர்கள். அதனால் அனைவரிடமும் அன்பு மழை பொழிவீர்கள். இன்று நீங்கள் மேற்கொள்ளும் பயணம் வெற்றிகரமாக நிறைவேறும். உங்களின் நேர்மறையான எண்ணம் இன்றைய நாளை சிறப்பாக அமைத்துத் தரும். விநாயகரை வழிபடுங்கள்.

மிதுனம்:
midhunam
இன்றைய நாள் உங்களுக்கு லாபகரமாக அமையும். வரவேண்டிய இடத்தில் இருந்து வரவேண்டிய பாக்கிகள் வந்து சேரும். உங்களுடைய திறமையால் புதிய முயற்சிகள் மேற்கொண்டு முன்னேற்றம் காண்பீர்கள். சுய முயற்சியால் நீங்கள் செய்த காரியங்கள் உங்களுக்கு மன அமைதியை நல்கும் நாளாக அமையும். தன்னம்பிக்கையுடன் திகழ்வீர்கள்.

கடகம்:
Kadagam Rasi
இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். சிக்கனத்தை கடைபிடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பீர்கள். வீண் விரயங்களால் மன உளைச்சல் ஏற்படலாம். தொலைதூரப் பயணம் மன அமைதிக்கு வழிவகுக்கும். உங்களை நீங்கள் இன்னும் மெருகேற்றி கொள்வதற்குரிய சரியான தருணம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிம்மம்:
simmam
இன்றைய நாள் உங்களுக்கு மிகவும் பதட்டமான நாளாக இருக்கும் எனவே எந்த காரியத்தை செய்தாலும் எச்சரிக்கையுடன் செய்வது நல்லது. எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து முடிவெடுங்கள். அவசரப்பட்டு நீங்கள் எடுக்கும் எந்த முடிவும் பெரும் பிரச்சினையை உருவாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடு நீங்கி மகிழ்ச்சி அடைவீர்கள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்

கன்னி:
Kanni Rasi
இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். இன்று கணவன்-மனைவி இடையே நல்ல புரிதல் உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் இருக்கிறது. ஆரோக்கியம் சீராக இருக்கும். உங்களின் நகைச்சுவை உணர்வு பலரின் அன்பை பெற்று தரும். தனவரவு திருப்திகரமாக இருக்கும்.

துலாம்:
Thulam Rasi
இன்றைய நாள் உங்களுடைய குடும்ப உறுப்பினர்களால் மன இறுக்கத்திற்கு ஆளாக கூடிய வாய்ப்புகள் இருக்கிறது எனவே வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. பொறுமையை கடைப் பிடிக்கக் கூடிய ஒரு நாளாக இன்றைய நாள் அமையும். மூன்றாம் நபர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது. கடன் வாங்கலாம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்த வேளையில் வேறு ஒரு வழியில் உங்களுக்கு அது பூர்த்தியாகும்.

விருச்சிகம்:
virichigam
இன்றைய நாள் உங்களுக்கு தனவரவு திருப்திகரமாக இருக்காது எனவே சேமிப்பை பழக்கப்படுத்திக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் புதிய மாறுதல்கள் ஏற்பட்டு உங்களுக்கு குழப்பத்தை உருவாக்கும் சூழ்நிலை உருவாகலாம். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. தெய்வ வழிபாடு சிறந்த பலன்களை நல்கும்.

தனுசு:
Dhanusu Rasi
இன்று சிலரால் நீங்கள் கோபம் அடையக்கூடிய நாளாக இருக்கும் எனினும் உங்கள் கோபத்தை கட்டுப்படுத்துவது நல்லது. தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்ளுதல் சிறந்த மனோபலத்தை உருவாக்கும். பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துவது நன்மை தரும். எதிர்பாராத இழப்புகளை சந்திக்க நேரலாம். எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:
Magaram rasi
இன்றைய நாள் நீங்கள் குதூகலத்துடன் காணப்படுவீர்கள். உங்களின் பணி இடத்திலும் சரி, குடும்பத்திலும் சரி உற்சாகம் ஊட்டக்கூடிய நாளாக அமையும். எதிர்பாராத நிகழ்வுகள் நடைபெறும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன. உங்களின் பணிவான குணத்தால் சில நற்பலன்கள் வந்து சேரும் இனிய நாளாக இன்றைய நாள் அமையும்.

கும்பம்:
Kumbam Rasi
இன்றைய நாள் உங்களுக்கு சுப விரயங்கள் ஏற்படக்கூடிய நாளாக இருக்கும். நல்ல காரியங்களுக்காக சில தொகையை செலவிட வேண்டிய சூழ்நிலை வரலாம். சமூகப் பொறுப்புகளை ஏற்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம் இதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகலாம். எனவே எதையும் யோசித்து செயலாற்றுவது நல்லது. கணவன்-மனைவி உறவிற்குள் சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க தெய்வ வழிபாடு சிறந்தது.

மீனம்:
meenam
இன்றைய நாள் உங்களுக்கு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். தூக்கமின்மை காரணமாக அவதிப்பட நேரலாம். எனவே தேவையான ஓய்வை மேற்கொள்வது நல்லது. நேரத்தை விரயமாக்காமல் சரியான திட்டமிடலும் பணிபுரிவது சிறப்பான பலனை தரும். கணவன் மனைவி இடையே பரஸ்பர அன்பு நிலைத்திருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருப்பது நல்லது.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான 2020 புத்தாண்டு பலன்கள்