இன்றைய ராசி பலன் – 26-2-2020

rasi palan - 26-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வழக்கமான பணிகளுடன் கூடுதல் பணிகள் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் நல்ல லாபம் காணப்படும். மேஷத்திற்கு இடமாற்றம் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. பணியிட மாற்றம், வீடு மாற்றம் போன்றவை ஏற்படலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். எல்லோரையும் புரிந்து கொள்ள நினைக்கும் உங்களை புரிந்து கொள்வதற்கு யாரும் இல்லையே என்ற கவலை மேலோங்கி காணப்படும். குடும்பத்தில் சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பிறருக்கு உதவுவதில் தயாள மனம் கொண்ட உங்களுக்கு இன்றைய நாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். முயற்சிகள் காலதாமதம் ஆனாலும் இறுதியில் வெற்றி பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை இருக்கும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் சற்று கவனமுடனிருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை நிலவும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக இருக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற நல்ல பலன்கள் காண்பீர்கள். இவ்வளவு நாள் தடைப்பட்டுக் கொண்டிருந்த நல்ல காரியங்கள் கைகூடிவரும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் மன மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களை கவர்வதற்கு புதிய உத்திகளை கையாள்வதன் அவசியத்தை உணர்வீர்கள். மாணவர்கள் தங்களின் கல்வியில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள். சேமிப்பின் அவசியம் உணர்ந்து கொள்வதற்கான சூழ்நிலை உருவாகும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளிப்பீர்கள்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் தைரியம் உங்களுக்கு உருவாகும். எந்த பிரச்சனையையும் இன்முகத்துடன் வரவேற்பதில் கெட்டிக்காரர் நீங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை இருக்கும். சொத்துக்கள் வாங்குவது விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் காண்பீர்கள். கணவன் மனைவி இடையேயான கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமூகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் குறித்த சாதகமான சூழ்நிலை உண்டு. வெளிநாடுகளில் வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல தகவல் வந்து சேரும். எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும் உங்களது மூளைக்கு கொஞ்சம் ஓய்வு தேவைப்படலாம். எனவே ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. மனதை ஒரு நிலைப்படுத்தி படித்தால் மட்டுமே படிப்பது மனதில் நிற்கும். அலைபாய விடக்கூடாது. குடும்பத்தில் அமைதி நிலவும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற அலைச்சல்களை சந்திக்க கூடிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக வேலை பளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு வாடிக்கையாளர்கள் இடத்தில் மதிப்பும்., மரியாதையும் கூடும். உங்களின் நாணயத்திற்கு ஏற்ப நல்ல பலன் உண்டாகும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும். சுவாச பிரச்சனைகள் மேலோங்கி காணப்படும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்தி காரணமாக அதிக லாபம் உண்டாகும். பொருளாதாரம் மேம்பட்டு காணப்படும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் உண்டாகும். பெண்களுக்கு இறை வழிபாடுகள் மூலம் ஆத்ம திருப்தி கிடைக்கும். பைரவரை வழிபட்டு வாருங்கள் சகல நன்மைகளும் உண்டாகும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் உண்டு.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும் நாளாக இருக்கும். நீங்கள் நினைத்தது ஒன்று நடப்பது வேறொன்றாக இருக்கும். மனதில் எதையும் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசி விடும் உங்களை ஒரு சிலர் புரிந்து கொள்ளாமல் இருப்பார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் காணப்படும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. பெண்கள் தியானம், யோகா போன்றவற்றை மேற்கொள்வதன் மூலம் உடல் நலத்தை காத்துக் கொள்ளலாம். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் ஆதரவு கிட்டும். ஊதிய உயர்வு குறித்த விஷயங்களில் கால தாமதம் ஏற்படலாம். வெளிநாட்டு வேலைவாய்ப்பு எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் சுய முடிவு எடுப்பது நல்லது. அடுத்தவர்களின் ஆலோசனை பலன் தராது. மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். ஆசிரியர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றகாரமான நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரத்தில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எந்த பிரச்சனையாக இருந்தாலும் தன்னம்பிக்கையுடன் செயல்படும் நாளாக இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணியிட மாற்றம் குறித்த விஷயங்களில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் லாபம் கிட்டும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கூட்டு தொழில் ஏக்கம் முயற்சிகள் பலன் தரும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் இனிய நாளாக இருக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பாராத தனவரவு உண்டாகி திருப்திபடுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். வியாபாரம் செய்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. சுபகாரிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி தரும். கணவன் மனைவி இடையே சிறு சிறு சண்டைகள் ஏற்பட்டு மறையும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதாரத்தில் பற்றாக்குறை இருப்பினும் திறம்பட சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நண்பர்களினால் ஆதாயம் உண்டு. வியாபாரம் செய்பவர்கள் எந்த ஒரு முடிவையும் இன்றைய நாளில் எடுக்காமல் இருப்பது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் நல்ல சூழ்நிலையில் இருப்பீர்கள். பிரிந்த குடும்பங்கள் ஒன்று கூடுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எதிர்பாராத நபர்களால் எதிர்பாராத மாற்றங்கள் உருவாகும். சகோதர, சகோதரிகளின் வழியே தேவையற்ற பிரச்சனைகள் வந்து சேரும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.