இன்றைய ராசி பலன் – 26-3-2021

rasi palan - 26-3-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நம்பும் சில விஷயங்கள் ஏமாற்றம் தரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தொலைதூர நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தது நடக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வாகன பயணங்களில் கவனத்துடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமை சிறப்பாக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எதிர்பார்க்கும் சில விஷயங்கள் உங்கள் எதிர்பார்ப்புக்கு மீறிய பலன்களைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாக தியானம் போன்றவற்றை மேற்கொள்வது நல்லது. கணவன்-மனைவி இடையே அன்பு கூடும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கும். சுயதொழில் புரியும் அவர்களுக்கு முன்னேற்றமான சூழ்நிலை அமையும். உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் பெறலாம். ஆரோக்கியம் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு எரிச்சலை உண்டாக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான லாபம் பெறலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் கவனத்துடன் செயலாற்றவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கடன் தொகை குறையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத மனக் குழப்பங்களில் நீக்கிவிட்டு உற்சாகத்துடன் செயல்பட முயல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனரீதியான பிரச்சனைகள் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் முன்னேற்றம் காண புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது நல்லது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையான ஓய்வு எடுத்துக் கொள்வது நலம் தரும். உத்யோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய சாதுர்யமான நடவடிக்கைகளால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வெளியே தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்கள் உண்டு.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் நிலுவையில் இருந்து வந்த கடன் தொகைகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். சுயதொழிலில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிக தொகையை கொடுத்து நல்ல லாபம் காணலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமற்ற அமைப்பு என்பதால் எதிலும் நிதானத்துடன் செயலாற்றுவது நல்லது. உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராட வேண்டி இருக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் பலனளிக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய தொழில் செய்வதற்கான நுணுக்கங்களை கற்றுக் கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் தொடங்கும் ஒவ்வொரு செயலும் வெற்றி வாய்ப்பை அணுகும். உங்களுடைய தொழில் முறை போட்டி பொறாமைகள் நீங்கும் லாபத்தை காண்பதற்கு முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு டென்சனை கொடுக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

English Overview:
Here we have Today Rasi Palan 26-3-2021.

- Advertisement -