இன்றைய ராசி பலன் – 26-3-2020

rasi palan - 26-3-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய நாளாக இருக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி இருக்கும். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரித்து காணப்படும். குழந்தைகள் செய்யும் குறும்புகளை கண்டு மகிழ்வீர்கள். இறை நம்பிக்கை அதிகரிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மன தைரியம் மேலோங்கி காணப்படும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்ப ஒற்றுமை கருதி சில முடிவுகளை எடுக்கும் சாத்திய கூறுகள் உண்டு. பிள்ளைகளால் உள்ளம் மகிழும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் குதூகலம் காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு மந்த நிலை ஏற்படும். வாடிக்கையாளர்கள் நலன் கருதி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராத விஷயங்கள் எதிர்பாராத நேரத்தில் நடக்கலாம்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறைந்து காணப்படும். மனதில் ஒருவித உற்சாகம் மேலோங்கி இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு சற்று மந்த நிலை ஏற்படும். குடும்பத்தில் சிறு குழப்பங்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு அனுசரித்து செல்வது நல்லது. ஆரோக்கிய விஷயத்தில் கவனம் அதிகமாக தேவைப்படும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வார்த்தைகள் மனதிற்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் இன்றைய நாளை உற்சாகமாக கழிப்பீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படக்கூடிய இனிய நாளாக இருக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுமுகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வழக்கம்போல் தங்களுடைய அன்றாட பணிகளை மேற்கொள்வீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு சமூகமான நாளாக இருக்கும். வாடிக்கையாளர்கள் இடத்தில் நன்மதிப்பு உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளின் மூலம் சிறு பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரித்து காணப்படும். பிள்ளைகள் செய்யும் தவறுகளை பொறுமையாக கண்டிப்பது நல்லது. உங்களின் கோபம் உங்களின் பலவீனமாக இருக்கும். அதிக பொறுமையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். உங்களின் திறமை களுக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் உண்டாக கூடிய இனிய நாளாக இருக்கும். எந்தப் பிரச்சினையையும் எதிர்க்கொள்ளும் உங்களுக்கு உங்களின் குடும்பமே பக்கபலமாக இருக்கும். நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். குடும்பத்தில் அமைதி நிலவும். பெண்களுக்கு மதிப்பும் மரியாதையும் கூடும். உங்களின் கஷ்டங்களை மற்றவர்கள் உணர்ந்து செயல்படும் நாளாக இருக்கும். பணம் சார்ந்த விசயங்களில் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்களை எதிர்கொள்ளும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தேவையான ஓய்வு எடுத்துக்கொள்வது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களின் நலன் கருதி பெற்றோர்கள் செயல்படுவது நல்லது. பெண்களுக்கு இன்றைய நாள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். அதிகப்படியான வேலைப்பளுவினால் சோர்ந்து காணப்படுவீர்கள். கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமுகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெண்களுக்கு குடும்பத்தில் மதிப்பும் மரியாதையும் உயர்ந்து
காணப்படும். மாணவர்களுக்கு தங்களின் எதிர்காலம் குறித்த குழப்பங்கள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் சற்று உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். ஒருசிலருக்கு புதிய வாய்ப்புகள் இல்லம் நாடி வரும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். குடும்பத்தில் சில நல்ல விஷயங்கள் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் தென்படும். உத்தியோகம் செய்பவர்களுக்கு மந்தமான சூழ்நிலை நிலவும். குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு காரணமாக சற்று சோர்வு காணப்படும். வியாபாரம் செய்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களின் எதிர்காலம் குறித்த பயம் பெற்றோர்களுக்கு மேலோங்கி இருக்கும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. குடும்பத்தில் இருக்கும் மூத்தவர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.