இன்றைய ராசி பலன் – 26-4-2020

rasi palan - 26-4-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் குழப்பம் ஏற்படக்கூடும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். கணவன்-மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்பட்டாலும் லாபம் அதிகரிக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுத்த முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். சகோதரர்களால் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கொடுத்த பழைய கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. வியாபாரத்தில் வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாகும். எடுத்த காரியங்களில் தடைகள் ஏற்பட்டாலும் அதை முடித்துக் காட்டுவீர்கள்.குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளை பெரியோர்களின் ஆலோசனையை பெற வேண்டும். பிள்ளைகளின் பிடிவாதம் நாளுக்கு நாள் அதிகரிக்கக்கூடும். திருமணம் தடை நீங்கி நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் வியாபாரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி தரும் நாளாக அமைய போகிறது. கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். தந்தைவழி உறவினர்கள் வருகையால் செலவுகளும் அலைச்சலும் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளை துணிச்சலுடன் எடுப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கக்கூடும். நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் உங்கள் வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பாக இருப்பார்கள்.வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனை அதிகரிக்க கூடும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகத்துடன் செயல்படும் நாளாக அமைய போகிறது. சகோதரர்களால் வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும். தந்தையின் தேவையை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் அனுசரணையாக செல்வது நல்லது.வியாபாரத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பால் லாபம் கூடுதலாக இருக்கும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக அமையும். வியாபாரத்தில் புதிய முயற்சியில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. நண்பர்களை சந்திப்பதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கும். உத்யோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கக் கூடும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாள்.கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நல்லது. கல்யாண வேலைகளில் அலைச்சல் ஏற்படும். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் வியாபாரிகளிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி விற்பனை வழக்கம் போலவே நடப்பது மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களது செலவுகள் அதிகரிக்கும் நாளாக அமையப் போகிறது. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றி காண்பதால் மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். எதிர்பார்த்த பணம் கையில் இருப்பதுடன் எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவுகள் ஏற்படும் அதனால் விற்பனை சற்று மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகளிடம் பாராட்டைப் பெறுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சனைகளில் தீர்வு காண்பீர்கள்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். தந்தையிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அரசாங்க உத்தியோகம் கைகூடி வரும். வீண் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் கையில் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள். மனைவிவழி உறவினர்களால் சிறுசிறு பிரச்சினைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அவர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமையும். நீண்ட நாளாக எதிர்பார்த்த பணம் இன்று கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் சில மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் அவர்களிடம் அனுசரணையாக நடந்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் சில பிரச்சனைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் லாபம் அதிகரிக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிந்தித்து செயல்பட வேண்டிய நாள். பெற்றோர்களின் தேவைகளை புரிந்து கொண்டு அதை நிறைவேற்ற சிறிது அலைச்சல் ஏற்படும். உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உங்களின் பொறுப்புகள் அதிகரிக்கக்கூடும். உத்தியோகத்தில் ஊழியர்களால் சில சங்கடங்கள் ஏற்படுவதால் பொறுமை அவசியம். அரசாங்க உத்தியோகம் கைக்கூடி வரும். திருமணம் தடை நீங்கி உறவினர்கள் மூலம் நல்ல வரன் கைகூடும். புதிய வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.