இன்றைய ராசி பலன் – 26-5-2020

rasi palan - 26-5-2020
- Advertisement -

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகமான நாளாக அமையும். எதிர்பார்த்த இடத்தில் பணம் வந்து சேர்ந்தாலும் எதிர்பாராத வீண் செலவுகள் அதிகரிக்கக் கூடும். மனைவிவழி உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உறவினர்களால் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் லாபம் வழக்கம்போலவே இருக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத இடத்தில் பண உதவி கிடைக்கக்கூடும். வீண் செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்திலுள்ளவர்களிடம் மனஸ்தாபம் ஏற்படுவதால் அவர்களிடம் பேசும் போது நிதானம் தேவை. வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்டிருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கக்கூடும். தந்தையிடம் மனஸ்தாபங்கள் ஏற்பட்டு நீங்கும்.

- Advertisement -

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாள். அரசாங்க உத்தியோகம் கைகூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் செலவு அதிகரிக்க கூடும். எடுத்த காரியத்தை தைரியமாக செய்து முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். செய்யும் தொழிலில் லாபம் வழக்கம்போல் இருக்கும். .

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் இன்று எடுக்கும் காரியங்கள் அனைத்தும் நன்மையில் முடியும். செலவுகளை சமாளிப்பதற்கு கடன் வாங்கும் நிலைமை ஏற்படும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். தந்தையின் தேவைகளை புரிந்து கொண்டு அதை நிறைவேற்றுவதில் சிரமம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் புது முயற்சியால் லாபம் அதிகரிக்க வேண்டும்.

- Advertisement -

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத உதவிகள் கிடைக்க கூடும். முக்கிய முடிவுகளை எடுப்பதில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் திருமணம் போன்ற நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சகோதரர்களால் சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் லாபம் வழக்கம்போலவே இருக்கும். மாணவர்களின் படிப்பில் மிகுந்த அக்கறை தேவை.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவுகள் அதிகரிக்கும் நாள். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கக்கூடும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். சொந்தத் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். பிள்ளைகளின் மேற்படிப்பு படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வியாபாரத்தில் பணியாளர்கள் உதவியால் விற்பனை அதிகரிக்கக்கூடும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த இடத்தில் பணம் கைக்கு வந்து சேரும். நீங்கள் எடுக்கும் முயற்சி அனைத்திற்கும் உறவினர்கள் ஒத்துழைப்பு தருவார்கள். வியாபாரத்தில் தொழில் ரீதியாக சில பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருப்பது நல்லது. நண்பர்கள் உங்களுடைய உதவி நாடி வருவார்கள். குடும்பத்தில் ஏற்பட்ட சில பிரச்சனைகள் வந்து நீங்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் அலைச்சல்கள் ஏற்படக்கூடும். அக்கம் பக்கத்தில் இருப்பவரிடம் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது கவனமாக பேச வேண்டும். நீங்கள் எடுத்த காரியங்களில் சிறு சிறு தடைகள் ஏற்பட்டாலும் அதை நன்றாக முடித்து விடுவீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதால் தெய்வீக அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்களால் பிரச்சனை ஏற்படக்கூடும் என்பதால் கவனம் தேவை.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக அமையும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை வழி உறவினர்களால் செலவுகள் அதிகரிக்கக் கூடும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சியில் ஈடுபட்டால் தோல்வியில் முடிய கூடும். எதிர்பார்த்த இடத்தில் பணம் கிடைக்கும். உத்தியோகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் எடுக்கும் முக்கிய முடிவுகளை பெரியோர்களின் ஆலோசனை பெற வேண்டும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க கூடும். திருமணம் தடை நீங்கும். வெளிநாடு செல்வதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். குடும்பத்தில் சிறிய அளவு கருத்து வேறுபாடு தோன்றி மறையும் பேச்சுவார்த்தைகள் காலதாமதமாக அமைய வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். கொடுத்த பழைய கடன் திரும்பி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மனைவியின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும் அதனால் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். நண்பர்களால் சிறுசிறு பிரச்சனைகள் வந்து நீங்கும். பல புதிய வாய்ப்புகள் உங்கள் கதவை தட்டும். உத்யோகத்தில் மேல் அதிகாரியிடம் நல்ல மதிப்பை பெறுவீர்கள்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாகும். சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரித்தாலும் அதை மகிழ்ச்சியாக செய்வீர்கள். தந்தையிடம் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் உள்ள எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். வியாபாரத்தில் ஊழியர்களிடம் ஏற்பட்ட பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -