இன்றைய ராசி பலன் – 26-6-2020

rasi palan - 26-6-2020
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய ஒரு உத்வேகத்தை தரக்கூடிய நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிலும் பதட்டப்படாமல் நிதானித்து செயல்படுவது நல்லது. குருபகவான் வழிபாடு தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனசஞ்சலங்கள் ஏற்படுத்த கூடிய நாளாக அமையும். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் தீரும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகளைப் போக்கும் நாளாக அமையும். உறவினர்கள் வழியே வீண் அலைச்சல்கள் ஏற்படும். வாகன ஓட்டிகள் கவனம் தேவை. சுப நிகழ்ச்சிகள் கைகூடும் நல்ல நாளாக அமையும். பெருமாளுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர தொழிலில் சிறந்து விளங்குவீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளை செய்யக்கூடிய நாளாக இருக்கும். அரசாங்க வழிப் பிரச்சினைகள் தீரும். வேலைகளில் அதிகம் உழைக்க வேண்டியிருக்கும். கணவன் மனைவிக்கு இடையே நிலவி வந்த தங்கு தடைகள் நீங்கும். ஆஞ்சநேயரை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். எதிலும் பதட்டப்படாமல் நிதானித்து செயல்படுவது நல்லது. மாரியம்மனை வழிபட்டு வர ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள்.

- Advertisement -

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சல் மிகுந்த நாளாக அமையும். தொழில் புரிவோருக்கு ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். வீடு மனை வாங்க சூழ்நிலை ஏற்படும். குடும்பத்தில் நிலவி வந்த சஞ்சலங்கள் விலகும்சூரிய பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர காரியத்தடைகள் நீங்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பண வரவு அதிகரிக்க கூடிய நாளாக அமையும். தடைப்பட்டிருந்த காரியத்தை முடித்து வெற்றி காண்பீர்கள். கூட்டாளிகளிடம் கவனம் தேவை. பண பரிவர்த்தனையும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. முருகப்பெருமானை வணங்கி வர மனநிம்மதி அடைவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டம் நிறைந்த நாளாக அமையும். உடன் இருப்பவர்கள் தங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. குடும்பத்தினரிடையே அன்பு அதிகரிக்கும். அம்மனுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டால் சிறந்த பலனை அடையலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பதட்டம் நிறைந்த நாளாக அமையும். புதிய முடிவுகளையும் முயற்சிகளையும் தவிர்ப்பது நல்லது. சிறு சிறு வியாபார தடைகள் வர வாய்ப்புண்டு. இழுபறியில் இருந்த கடன் பிரச்சினைகள் விலகும். கூட்டாளிகளிடையே அளவாக பேசுவது நன்மை தரும். அம்மன் வழிபாடு நல்ல பலன் தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும். பழைய கடன் பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி அடைவீர்கள். ஜீரணம் சம்பந்தமான வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. புதிய பொருட்கள் வாங்க சூழல் உருவாகும். சிவபெருமானை வணங்கி வர சுபிட்சம் உண்டாகும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். அரசாங்க ஊழியர்களுக்கு இடமாற்றம் ஏற்படும். என் புது மனை வீடு வாங்க சூழல் ஏற்படும். பிள்ளைகள் வழியில் அனுசரித்து செல்வது நல்லது. விஷ்ணு துர்க்கையை வழிபட்டு வர இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்லதொரு முன்னேற்றத்திற்கான நாளாக அமையும். முகத்தில் சற்று தொய்வு ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் கைகூடும் நல்ல நாளாக அமையும். உடன் பணியாற்றுபவர்கள் இடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிடாரி அம்மன் வழிபாடு நிலையான வரவுக்கு வழிவகுக்கும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

- Advertisement -