இன்றைய ராசி பலன் -27-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். மாலையில் புதிய நண்பர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும்.

ரிஷபம்:
rishabam
புதிய முயற்சிகளை மாலையில் தொடங்குவது நல்லது. குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். பிள்ளைகளால் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் உண்டாகும்.

மிதுனம்:
Midhunam
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பணம் கையில் இருப்பதால் வீண்செலவுகளை செய்ய வேண்டாம். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு மும்பு குடும்பத்தில் ஆலோசனைகள் செய்யுங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். அலுவலகம் பணிகளால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரம் வழக்கம் போல காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாள்.

கடகம் :
புதிய முயற்சியில் ஈடுபட வேண்டாம்.தெய்வ பிரார்த்தனைகளை நிறைவேற்ற வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மாலையில் பள்ளி நண்பர்களை சந்தித்து உரையாடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தை விட கூடுதலாக அமையும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:

- Advertisement -

தாயின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாகும். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து செல்லுங்கள். மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

கன்னி:

மகிழ்ச்சியான நாள். அரசாங்கம் சார்ந்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். பிரார்த்தனைகளை நிறைவேற்ற குடும்பத்தாருடன் கோவில்களுக்கு செல்வீர்கள். தாய்மாமன் வழி உறவுகளால் செலவுகள் உண்டாகும். அலுவலகத்தில் பணியாளர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும்.

துலாம்:

தாய் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். திடீர் பயணம் மேற்கொள்ள நேரிடும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதர்கள் உங்கள் உதவியை நாடி வருவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதில் கவனமாக செயல்படுங்கள். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

விருச்சிகம்:

அனுகூலமான நாள். சிலர் குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்ள நேரிடும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளை தொடங்குங்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு அதிகாரிகள் பாராட்டுவார்கள். வியாபரத்தில் எதிர்பார்த்த லாபம் கூடுதலாக அமையும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

தனுசு:

உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு ஏற்படும். வழக்கமான பணிகளில் மட்டும் கவனம் செலுத்துங்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். தந்தைவழி உறவுகளால் செலவுகள் உண்டாகும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் ஏற்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள்.

மகரம்:
magaram
மகிழ்ச்சியான நாள். வாழ்க்கைத்துணைவியால் குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கக்கூடும். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தாருடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். கணவன் மனைக்குள் அந்நோனியம் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருங்கள். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

உடல் ஆரோகித்தல் கவனம் செலுத்துங்கள். வெளியில் உண்பதை தவிர்க்கவும். சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான பணிகள் காணப்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் தொந்தரவு அதிகரிக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

மீனம்:

புதிய ஆபரணங்களை வாங்கும் யோகம் உண்டாகும். சகோதரர்களால் வீண்செலவுகள் உண்டாகும். பணம் கையில் இருப்பதால் அதை சமாளித்து விடுவீர்கள். சிலருக்கு வயிற்று பிரச்சனைகள் உண்டாகும். பயணங்களை தவிர்த்து கொள்ளுங்கள். மாலையில் புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -