இன்றைய ராசி பலன் – 27-04-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். முற்பகல் வரை காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பொருள்சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டு.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
இன்று பரபரப்பாகச் செயல்படுவீர்கள். அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். பயணத்தின் போது கவனம் அவசியம். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கடன் விஷயத்தில் கவனமாக இருப்பது அவசியம்.

மிதுனம்:

Mithunam Rasi
அதிகாரிகளின் சந்திப்பும் அதனால் காரிய அனுகூலமும் உண்டாகும். சகோதரர்கள் உங்கள் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு உதவி செய்வார்கள். பழைய கடன் பாக்கி இன்று கிடைக்கும். பிற்பகலுக்குமேல் அலுவலகத்தில் வேலை அதிகரிப்பதன் காரணமாக நீங்கள் செய்ய நினைத்த சில சொந்த வேலைகளைத் தள்ளிப்போட நேரும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
அலுவலகத்தில் பணிச்சுமை அதிகம் இருந்தாலும் சிறப்பாகச் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் உஷ்ணத்தின் காரணமாக வயிற்று வலி ஏற்படக்கூடும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

சிம்மம்:

simmam
இன்று எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பார்த்த நல்ல தகவல்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். அலுவலகத்தில் அதிகரிக்கும் பணிச்சுமை உங்களை சோர்வு அடையச் செய்யும். அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
இன்று எதையும் பொறுமையாக யோசித்து முடிவெடுப்பது நல்லது. தந்தை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீர்கள். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டு.

கன்னி ராசி பொதுவான குணங்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

துலாம்:

Thulam Rasi
சிலருக்கு எதிர்பாராத பணவரவும் உண்டாகும். வெளியூர்களில் இருந்து நல்ல சுபச் செய்திகள் வரும். உறவினர்களால் உதவி உண்டு. தாய்வழி உறவுகளால் நன்மை ஏற்படும். சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளைத் தொடங்கவேண்டாம்.

விருச்சிகம்:

virichigam
எதிர்பாராத பணவரவும் உண்டாகும். உறவினர் வருகையும், அவர்கள் மூலம் சுபச்செய்தியும் கிடைக்கும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியங்கள் அனுகூலமாகும். மனதில் சிறு அளவில் சோர்வு ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும்.

தனுசு:

Dhanusu Rasi
மனதில் உற்சாகம் பெருகும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கு இடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலர் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

மகரம்:

Magaram rasi

உற்சாகமான நாள். நண்பர்களின் சந்திப்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடையும். வாழ்க்கைத் துணை வழியில் நல்ல தகவல் வந்து சேரும். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் நன்மை உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasi
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கனிவாகப் பேசி உங்கள் காரியங்களை முடித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத பொருள்வரவுக்கு இடம் உண்டு. வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் நன்மை உண்டாகும்.

மீனம்:

Meenam Rasi
உற்சாகமான நாள். அலுவலகத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

உங்கள் நாள் மேலும் சிறப்படைய இந்த ராசி பலன் உங்களுக்கு உதவும் என் நம்புகிறோம்.

- Advertisement -