இன்றைய ராசி பலன் – 27-07-2020

rasi palan - 27-7-2020

மேஷம்
Mesham Rasi

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகளைப் போக்கும் நாளாக அமையும். எதிர்பாராத கடனுதவிகள் கிடைக்கும். புது நட்புக்கள் உருவாக வாய்ப்பு உண்டு. பிறரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆஞ்சநேயர் வழிபாடு சிறப்பான பலனைத் தரும்.

ரிஷபம்
Taurus zodiac sign

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளை செய்யக்கூடிய நாளாக இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். பெற்றோர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. சுயதொழில் செய்வோருக்கு பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்கும். கால பைரவர் வழிபாடு நற்பலன்களை அளிக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். குடும்பத்தினருடன் ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. எதிர்பாராத கடனுதவிகள் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் காட்டுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிலவிவந்த பிரச்சனைகள் தீரும். விநாயகர் வழிபாடு இல்லத்தில் மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

- Advertisement -

கடகம்
Kadagam Rasi

கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய மாற்றங்களை அழிக்கக் கூடிய நல்ல நாளாக அமையும். மாணவர்கள் தங்கள் துறையில் சிறந்து விளங்குவர். நெடு நாட்களாக நிலவிவந்த கடன் பிரச்சினைகள் தீரும். எதிலும் நிதானித்து செயல்படுவது நன்மை தரும். குருபகவான் வழிபாடு மேன்மையை உண்டாக்கும்.

சிம்மம்
Leo zodiac sign

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல பலன்களைத் தரக்கூடிய அற்புதமான நாளாக அமையும். எடுத்த செயலில் வெற்றி காண்பீர்கள். குடும்பத்தினரிடமிருந்து ஒத்துழைப்பு கிடைக்கும். பயணங்களை தவிர்ப்பது நல்லது. ராகு கேது வழிபாடு நிலையான சந்தோசத்தை கொடுக்கும்.

கன்னி
kanni

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் புதிய முயற்சிகளை எடுக்க கூடிய நாளாக அமையும். அரசாங்க ஊழியர்களுக்கு பணி மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எந்த செயலுக்கும் ஒன் சிந்தித்து செயல்பட்டால் வெற்றி காணலாம். தலை, கழுத்து சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஆஞ்சநேயரை வழிபடுவதால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.

துலாம்
Thulam Rasi

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரயாணங்கள் மிகுந்த நாளாக அமையும். வீண் அலைச்சல் களால் உடல்நலத்தில் பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு. பெற்றோர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. புதிய நட்புகள் கிடைக்க வாய்ப்பு உண்டு. நந்தி பகவானை வழிபட்டு வர நல்ல முன்னேற்றம் காண்பீர்கள்.

விருச்சிகம்
Scorpius zodiac sign

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சோம்பல் மிகுந்த நாளாக காணப்படும்.தொழில் புரிவோருக்கு பொருளாதாரத்தில் மந்தமான சூழல் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் கவனத்துடன் இருப்பது நல்லது. பெற்றோர்களுடன் நல்ல அன்பு அதிகரிக்கும். காமாட்சி தேவியை வணங்கி வர தைரியமும் செல்வமும் பெருகும்.

தனுசு
dhanusu

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கை மேலோங்கிய நாளாக அமையும். தடைப்பட்ட காரியத்தை வெற்றியுடன் முடிப்பீர்கள். சுற்றத்தாரின் ஆதரவு பெருகும். பிறரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. மேல் அதிகாரியிடம் அனுசரித்துப் போவது நல்ல பலன் தரும். குரு பகவானுக்கு சிறப்பு வழிபாடு மேற்கொண்டு வர காரியத்தடைகள் நீங்கும்.

மகரம்
Magaram rasi

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக அமையும். எதையும் தன்னம்பிக்கையோடும் செய்யும் நாளாக இருக்கும்.கணவன் மனைவியிடையே சிறுசிறு வாக்குவாதங்கள் இருக்கும். உடன் பணிபுரிவோர் ரோடு அனுசரித்துப் போவது நல்லது. பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். விஷ்ணு பகவான் வழிபாடு குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பணப்புழக்கம் நிறைந்த நாளாக இருக்கும். நெடு நாட்களாக நிலவிவந்த பண பிரச்சனைகள் தீரும். சுற்றத்தாரின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களிடம் ஆதரவைப் பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். துர்க்கை அம்மன் வழிபாடு சிறந்த பலனை கொடுக்கும்.

மீனம்
meenam

மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் துணிச்சல் மிகுந்த நாளாக அமையும். திருமண தடைகள் நீங்கி இல்லத்தில் சுப நிகழ்வுகள் நிகழும். விலகிச் சென்ற உறவுகள் திரும்பி வரும். பண வரவு செலவில் கவனம் தேவை. அங்காரகனுக்கு சிறப்பு வழிபாடு செய்து வர இல்லத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.