Rasi Palan: இன்றைய ராசி பலன்கள் (27/08/2019): புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள்

Rasi Palan

மேஷம்:
Mesham Rasi

பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். காலைப் பொழுது இதமாக விடியும். அனைத்து முயற்சிகளும் உங்களுக்குச் சாதகமாக முடியும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
Rishabam Rasi

எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச் சுமை அதிகரிக்கும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்:
midhunam

முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் உண்டாகும். பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். அதிகாரிகள் சந்திப்பும், அதனால் காரிய அனுகூலமும் ஏற்படும். அத்தியாவசிய தேவைகளுக்காக ஒரு சிலர் கடன் வாங்கவும் நேரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கடகம்:
Kadagam Rasi

புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைத்து உங்களுக்குப் பெருமை சேர்க்கும். அலுவலகத்தில் மற்றவர்களின் வேலைகளையும் நீங்கள் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறு தடைகள் ஏற்படக்கூடும்.

சிம்மம்:
simmam

காலைப் பொழுது இதமாக விடியும். மனம் உற்சாகமாகக் காணப்படும். வழக்கில் உங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும். சக பணியாளர்களின் உதவியால் மனதில் உற்சாகம் ஏற்படும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் நன்மை உண்டாகும்.

கன்னி:
Kanni Rasi

எதிர்பாராத தனலாபம் உண்டாகும். விருந்து விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். வெளியூர்களில் இருந்து எதிர்பாராத தகவல்கள் வரும். பணத்தேவை அதிகரிக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சகோதரர்களால் சங்கடம் உண்டாகக்கூடும்.

துலாம்:
Thulam Rasi

உற்சாகமான நாள். சிலர் பணியின் காரணமாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். தேவைப்படும் பணம் கடனாகவாவது கிடைத்துவிடும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட யோகம் ஏற்படக்கூடும்.

விருச்சிகம்:
virichigam

விருச்சிக ராசிக்கு இன்றைய ராசி பலன் படி உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி நிலவும். காலை வேளையில் புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். எதிர்பாராத பணவரவுக்கு இடமுண்டு. எதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.

தனுசு:
Dhanusu Rasi

வெளியூர்களில் இருந்து எதிர்பாராத நல்ல தகவல்கள் வரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வரும். சகோதரர்களால் ஆதாயம் கிடைக்கும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். இன்று பிற்பகலுக்குள் நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்லபடி நிறைவேறும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்கு மேல் சிறு சங்கடம் ஏற்படக்கூடும்.

மகரம்:
Magaram rasi

அலுவலகத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவம் நிகழும். புதிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். அதனால் சிறிய அளவில் கடன் படவும் நேரும். பிள்ளைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணங்கள் ஏற்படும்.
- Advertisement -

கும்பம்:
Kumbam Rasi

வீட்டில் பராமரிப்புப் பணிகள் அதிகரிக்கும். மனம் உற்சாகமாகக் காணப்படும். இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி உண்டாகும். முயற்சிகளில் வெற்றியும் அதனால் பண லாபமும் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

மீனம்:
meenam

வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் அனுகூலம் உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்