இன்றைய ராசி பலன் – 27-1-2021

rasi palan - 27-1-2021

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானம் மற்றும் கவனம் தேவைப்படக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரித்து காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திலிருந்து எதிர்பார்த்த தொகை கைக்கு கிடைக்கும். பெண்களுக்கு மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற்செய்தி கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் சாதகப் பலன்கள் உண்டாகும் வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வெறுப்பை உண்டாக்கும் வகையில் அமையும். புதிய முயற்சிகளை தைரியமாக முன்வைத்தால் முன்னேற்றம் நிச்சயம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். பெண்களுக்கு நினைத்த காரியம் கைகூடும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய ராசிக்கு எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் தைரியம் பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கப்படும் புதிய பொறுப்புகளை சரியாக செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை நீங்கள் சந்தித்து வந்த மந்தநிலை மாறி தொழில் சூடு பிடிக்கத் தொடங்கும். பெண்களுக்கு மனதில் இருக்கும் கவலைகள் நீங்கி புத்துணர்வு பிறக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் தனவரவு மனதிற்கு உற்சாகத்தை அளிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடன் பணிபுரியும் பணியாளர்கள் மூலம் நன்மைகள் நடைபெறக்கூடிய நாளாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். பெண்களுக்கு எதிர்காலம் பற்றிய பயம் இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளை கவனத்துடன் மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். ஒரு சிலருக்கு பழைய தொகைகள் வசூலாகும் கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி போட்டிகள் குறையும். பெண்களுக்கு கணவன் மேல் புதிய புரிதல் உண்டாகும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பகைவர்களை எளிதாக கண்டு கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலையை மாற்றி புதிய யுக்திகளை கையாளுவீர்கள். பெண்களுக்கு தனவரவு சிறப்பாக அமைய எம்பெருமான் விநாயகரை வழிபட செய்யலாம்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய கடன் தொகைகள் குறைப்பதற்கான வழிகளை திறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்த்த வகையில் அனுகூலமான பலன்களை காணலாம். கணவன் மனைவியிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான மனநிலையில் காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகளில் உறுதியாக இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறும் அமைப்பாக உள்ளது. உங்களுடைய நேர்மையான குணத்திற்கு பரிசு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். ஆரோக்கியத்தை பேணிக் காப்பது நல்லது.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கிரக அமைப்பு சாதகமற்ற நிலையில் இருப்பதால் எதிலும் முன்னெச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்ப்பதை விட அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறைவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் விரிசல்கள் நீங்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத மாற்றங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். ஒருசிலருக்கு சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான வாகன பயணங்களில் எச்சரிக்கை தேவை. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சமுதாயத்தின் மீது உள்ள அக்கறை அதிகரித்து காணப்படும். கணவன் மனைவி இடையே புரிதல் உண்டாகும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் லாபம் உண்டாகும். பொருளாதார ரீதியான ஏற்றம் சீராக இருக்கும். குடும்பத்தேவைகளை எளிதாக பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகளைக் கை கொடுக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டு கொடுத்து செல்வது நல்லது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஒரு முறைக்கு பலமுறை ஆலோசனை செய்து விட்டு முடிவெடுப்பது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செய்தால் இழப்புகளை சந்திக்க நேரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவு குறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருக்கும் மந்த நிலை நீடிக்கும் என்பதால் புதிய யுத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். சகோதர சகோதரிகள் வழியே அனுகூல பலன் உண்டு.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்