இன்றைய ராசி பலன் – 27-1-2020

rasi palan - 27-1-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் முன்னேற்றம் காண்பீர்கள். புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்பவர்கள் புதிய யுக்திகளை கையாள்வது நல்லது. குழந்தை பாக்கியம் எதிர்நோக்கி காத்திருப்போருக்கு நல்ல தகவல்கள் வந்து சேரும். வேலைவாய்ப்பை நோக்கி காத்திருப்போருக்கு மனதிற்கு பிடித்த வேலை அமையும். ஒரு சிலர் புதிய தொழில் நுட்பங்களை வாங்கும் யோகம் பெறுவீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டாகும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். வீண் அலைச்சல்கள் உருவாகக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள். எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த இடத்திலிருந்து தன வரவு திருப்திகரமாக வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய தொழில் வாய்ப்புகளில் ஈடுபடுபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடுகளில் வசிப்போருக்கு தாய்நாடு திரும்புவதில் சில பிரச்சினைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். குடும்பத்தில் அமைதி நிலவும்.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றி பெறும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். உயர்கல்வி பயில்வோருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். வெளி நாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்கள் சொத்துக்கள் வாங்குவது போன்ற திட்டமிடலில் ஈடுபடுவீர்கள். கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு பின் மறையும். வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்களுக்கு தகுந்த வேலை கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை காணப்படும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். தன வரவு திருப்திகரமாக இருக்கும். நண்பர்கள் மற்றும் உறவினர்களால் ஆதாயம் உண்டு. கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகக் கூடிய சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றகரமான நாளாக இருக்கும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெண்களுக்கு ஒரு சிலருக்கு வாகன வகையில் ஆதாயம் கிட்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மனநிம்மதி உண்டாகும். பெற்றோர்களின் ஆதரவு கிட்டும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு. வழக்குகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் ஒரு சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையப் பெற்று நல்ல முன்னேற்றம் காண்பார்கள். கல்வியில் மாணவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் மூன்றாம் நபர்களால் குழப்பங்கள் உருவாக கூடிய சாத்தியக் கூறுகள் உண்டு. எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. சகோதர, சகோதரிகளால் ஆதாயம் கிட்டும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி அடையும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். சுய தொழில் புரியும் பெண்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பொருளாதார பற்றாக்குறையை திறம்பட சமாளிப்பீர்கள்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு நல்ல சாதகமான சூழ்நிலை உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக கடுகடுப்புடன் காணப்படுவீர்கள். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஆதரவு கிட்டும். ஒற்றுமை நிலவும். சொத்துக்கள் வாங்குவது மற்றும் விற்பது தொடர்பான விஷயங்களில் லாபகரமான நாளாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்கு சந்தையில் ஏற்றகரமான நாளாக இருக்கும். குடும்ப நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். புதிய தொழில் முயற்சிகள் மேற்கொள்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை நிலவுகின்றன. கூட்டு தொழில் முயற்சிகள் பலன் தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றத்தை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நினைத்த இடத்தில் இடமாற்றம் உண்டாகி திருப்திபடுத்தும். பெண்கள் வீட்டுப் பொருட்களை வாங்கும் யோகம் பெறுவீர்கள். குடும்பத்தில் உள்ள நபர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளால் உள்ளம் மகிழும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் அக்கறை தேவை. சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கல்விக்காக ஒரு பெருந்தொகை செலவிட நேரிடலாம். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக சில உடல் உபாதைகளால் அவதிப்படுவீர்கள். சரியான ஓய்வு எடுத்துக் கொள்வது நல்லது. வெளிநாடு செல்ல காத்திருப்போருக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். தொலை தூர பிரயாணங்கள் மூலம் மன அமைதி கிட்டும். கணவன் மனைவி இடையே இருந்த ஒற்றுமை நீடித்திருக்கும். புதிய தொழில் முயற்சிகளில் ஈடுபடுபவர்கள் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. நண்பர்களால் ஒரு சிலருக்கு பிரச்சனைகள் உருவாகும். பொருளாதாரம் சீராக இருக்கும். தனவரவு திருப்திகரமாக இருக்கும். விநாயகரை வழிபடுவது நல்லது.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். மாணவர்களின் கல்வி நிலை சீராக இருக்கும். புதிய வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோகத்திலிருப்பவர்கள் இடமாற்றத்தை எதிர்பார்க்கலாம். வெளிநாட்டு வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். பங்கு சந்தையில் ஏற்றகரமான நாளாக இருக்கும். கூட்டுதொழில் முயற்சிகள் பலன் தரும்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. தொழில் தொடர்பாக பிரயாணங்கள் மேற்கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் நிலவுகின்றன. கூட்டுதொழில் முயற்சிகள் பலன் தரும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் வெற்றி கிட்டும். பிள்ளைகளால் உள்ளம் மகிழும். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உயர்கல்வி பயில்வோர் புதிய முறைகளை கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலைவாய்ப்புக்காக விண்ணப்பித்திருப்போர்க்கு நல்ல தகவல் வந்து சேரும். பொருளாதாரம் சீராக இருக்கும். சகோதர சகோதரிகளால் ஆதாயம் கிட்டும்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறைகள் நீங்கி நல்ல முன்னேற்றம் காணப்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்கள் லாபகரமாக அமையும். மாணவர்களின் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வெளிநாடுகளில் வேலை பார்ப்பவர்கள் தாய்நாடு திரும்புவதற்கான திட்டமிடலுடன் இருப்பீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி ஒற்றுமை பலப்படும். சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களால் மன மகிழ்ச்சி உண்டாகும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வெளிநாடுகளில் வசித்து கொண்டு இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். எதிர்பாராத பண வரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு காரணமாக சற்று சோர்வுடன் காணப்படுவார்கள். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. உயர்கல்வி பயில்பவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதிற்குப் பிடித்தவார்களால் சங்கடங்கள் உருவாகி மறையும். வியாபாரம் செய்பவர்கள் புதிய வாய்ப்புகளை கற்றுத் தேர்வதன் மூலம் முன்னேற்றம் காண்பார்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

இதையும் படிக்கலாமே: உங்கள் ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்