இன்றைய ராசி பலன் – 27-10-2020

rasi palan - 27-10-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் உங்களுடைய பேச்சுக்கு மதிப்பும் மரியாதையும் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான புதிய நபர்களின் அறிமுகம் முன்னேற்ற பாதையில் செல்ல துணைபுரியும். பெண்களுக்கு மன வலிமை அதிகரிக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. விநாயகரை வழிபட நல்லது நடக்கும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எந்த ஒரு முடிவையும் சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. பெண்களுக்கு தன்னம்பிக்கை மற்றும் தைரியம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு தெரிந்த விஷயங்களை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மனரீதியான விஷயத்தில் நம்பிக்கைக்கு உரியவர்கள் உதவி செய்வார்கள். பைரவ வழிபாடு மன அமைதி தரும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை இருந்து வந்த தடைகள் நீங்கி புது வழி பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஆதரவை உற்சாகத்தைக் கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான போட்டிகள் வலுவிழந்து போய்விடும். கணவன் மனைவி இடையே இருந்த ஒற்றுமை குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிவவழிபாடு மன அமைதி தரும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்கள் இன்றைய நாள் சவால்களை எதிர்கொள்ளும் இனிய நாளாக இருக்கும். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிக்க போராடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர புதிய முயற்சிகள் மேற்கொள்வீர்கள். பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் பெரிய தொகையை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளின் வழியே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும் பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த ஒற்றுமை அதிகரிக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். கருடாழ்வார் சன்னிதிக்கு சென்று விளக்கு ஏற்றுங்கள் நல்லது நடக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களுக்கு கிடைத்த அனுபவங்களை பயன்படுத்தி முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் இருக்கும் மூத்த அவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. பூர்விக சொத்துக்கள் மூலம் ஒரு சிலருக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபம் அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உங்களுக்கு நடக்க இருக்கும் நல்லவைகள் யாவும் இறைவனால் நடப்பவை என்பதை உணருவீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்க ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். ஆரோக்கியத்தில் சற்று எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். பெண்களுக்கு வேலை பளு காரணமாக உடல் அசதி ஏற்பட்டு பின்பு மறையும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். சோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய முழு திறமையை வெளிப்படுத்த கூடிய நாளாக இருக்கும். இதுவரை வசூலாகாத கடன் வசூல் ஆகக் கூடிய சாத்தியக்கூறு உண்டு.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சினைகள் தீர்வதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்பதை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் அன்னோன்யம் அதிகரிக்கும். முருகன் வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் இளையவர்களிடம் ஏற்பட்டு இருந்த மனக்கசப்புகள் நீங்குவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களை தவறாக நினைத்தவர்கள், பழிச் சொற்கள் போன்றவற்றிலிருந்து நல்ல முடிவு காண்பீர்கள். வாகன ரீதியான பயணங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சார்ந்த விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்ப்புகள் வலுவாக வாய்ப்புகள் உண்டு. நீங்கள் செய்யும் விஷயங்களில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். நீங்கள் செய்யும் விஷயங்களில் தடை தாமதங்கள் ஏற்பட்டாலும் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களின் திறமைக்கு ஏற்ப அங்கீகாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாக சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அலைச்சல் மற்றும் டென்சன் அதிகரிக்கக் கூடிய நாளாக இருக்கும். குடும்பத்தில் இருக்கும் நபர்கள் உங்களை உணர்ச்சிவசப்படக் கூடிய சூழ் நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். எனினும் பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. எனினும் பொறுமையுடன் இருப்பது மிகவும் நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நியாயமான விஷயங்களுக்கு போராட வேண்டியிருக்கும். பிள்ளைகளுக்கு நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.