இன்றைய ராசி பலன் – 27-12-2020

rasi palan - 27-12-2020

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டு. பெண்களுக்கு தங்களைப் பற்றிய புரிதல் மேலும் அதிகரிக்கக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையக்கூடும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த பிரச்சினை முடிவுக்கு வரும். கணவன்-மனைவிக்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் புது முயற்சிகளுக்கு அதிக பலன் கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய சாதுர்யமான திறமையால் நன்மைகளைப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய நயமான பேச்சினால் மற்றவர்களை எளிதாக கவர்ந்து விடுவீர்கள். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேலோங்கி காணப்படும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபார ரீதியான வெளிவட்டாரத் தொடர்பு மேலும் அதிகரிக்கக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் கருத்துவேறுபாடு நீங்கி பரஸ்பர ஒற்றுமை நீடிக்கும். உற்றார் உறவினர்களின் ஆதரவு தக்க சமயத்தில் கிடைக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய முன்கோபத்தை குறைத்துக் கொள்வதன் மூலம் மன அமைதி பெறலாம். குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே இருந்த நெருக்கம் குறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுக்கு கீழ் பணி புரியும் தொழிலாளர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகளால் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எந்த ஒரு முடிவையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து ஏற்பது நல்லது. குடும்ப உறவுகளுக்கு இடையே இருந்த சிக்கல் தீரும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கி அன்பு அதிகரிக்கக்கூடிய சந்தர்ப்பங்களும் அமையும். ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அலைச்சல் இருந்தாலும் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். பெண்களுக்கு தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமையும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் மற்றவர்களின் ஆலோசனையை கேட்டு முடிவெடுப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய கனிவான பேச்சால் வாடிக்கையாளர்களை கவருவீர்கள்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முயற்சிகளில் முன்னேற கூடிய அற்புதமான அமைப்பாக உள்ளது. நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய வாய்ப்புகளும் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஒப்பந்தம் செய்யக்கூடிய விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பங்குதாரர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். எதிர்பாராத நன்மைகள் பெண்களுக்கு ஏற்படும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை காணப்பட்டாலும் பொருள் தேக்கம் ஏற்படுவதில் பிரச்சனைகள் இருக்காது. உத்தியோகம் மற்றும் தொழில் செய்யும் பெண்களுக்கு ஏற்றம் தரும் நாளாக அமைய இருக்கிறது. பிள்ளைகள் மூலம் நல்லவைகள் நடக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுறுசுறுப்புடன் செயல்படக்கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. எதிர்பாராத பண வரவு மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். பொருளாதாரத்தில் ஏற்றம் காணப்படுவதால் வீட்டு தேவைகள் எளிதாக பூர்த்தி செய்வீர்கள். பெண்கள் ஆரோக்கிய ரீதியான விஷயத்தில் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

உங்கள் ராசிக்கான 2021 புத்தாண்டு பலன்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்